Breaking News Tamil LIVE: பாஜக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிப்பு
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,340 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 2,312 ஆக இருந்த தொற்று பாதிப்பு இன்று 2,340 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தொற்று பாதிப்பினால் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பினால் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி 2,599 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகபட்சமாக சென்னையில் 607 ஆக பதிவாகியுள்ளது.
பாஜக கூட்டணியின் குடியரசுத் துணை தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆன்லைன் ரம்மியால் காவலர் காளிமுத்து உயிரிழந்த விவகாரத்தில் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மியை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
என்னை ஏன் அம்மா கூடவே ஒப்பிட்டாங்க.. நயன்தாரா கூட ஒப்பிடுவது எதிர்ப்பார்த்ததுதான்.. பழகிவிட்டது - ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்
நாடு முழுவதும் 200 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டது- மத்திய சுகாதாரத்துறை தகவல்
லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளதால் ஓ.பன்னீர் செல்வம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் சீராக உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
திரெளபதி முர்முக்கு மீது மரியாதை உள்ளது. இருப்பினும் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி ஆகிய ஐந்து மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை தென்படவில்லை. குரங்கு அம்மை பரிசோதனைக்காக ஆய்வு மையம் அமைக்கபட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
இந்தியாவில் ஒரே நாளில் 22,93,627 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது : சுகாரத்துறை அமைச்சகம்
தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் 42- வது முறையாக அதன் முழு கொள்ளவை எட்டியது.
நாடுமுழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,39, 073 லிருந்து 1,40, 760 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு உயர்மட்ட சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர் மட்டம் 119.29 அடியை நெருங்கியது. இதையடுத்து, காவேரி கரையோர பகுதியில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச நாட்டைவிட்டு வெளியேற தடை: இலங்கை உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் அரிசி மீதான 5 % ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி இன்று அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டம்.
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
உலகளவில் இதுவரை 56.61 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் 53.75 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இந்த கொடிய தொற்றால் 63.85 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் 1000க்கு மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு நோய்கள் கட்டுபாட்டு மற்றும் தடுப்பு மையமான சிடிசி தெரிவித்துள்ளது.
Background
சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 56 வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் 56வது நாளாக இன்று ( ஜூலை 16) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -