Breaking News Tamil LIVE: அதிமுக அலுவலகத்திற்கு சீல் ஏன்? - காவல்துறை விளக்கம்
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ள நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதிமுக அலுவலகத்தை சீல் வைத்ததுதொடர்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது ஏன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால் தான் சீல் வைக்கப்பட்டது என்றும், சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து மேலும் பிரச்சனை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையின் தலையீடு இல்லாமல் போயிருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். நாங்கள் அதை தடுத்தோம். பொதுமக்கள் யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.
வன்முறை நடக்கும் போது போலீசார் வாய்மூடி பார்வையாளர்களாக உள்ளனர். நீங்கள் ஏன் காத்திருந்து அவர்களை அனுமதிக்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நாங்கள் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தோம். காலை 8.45 மணியளவில் இரு கோஷ்டிகளுக்கு இடையே தகராறு தொடங்கியது. நாங்கள் இரு தரப்பினரையும் தடுக்க முயன்றோம் ஆனால் அவர்கள் உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர் என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்.
கட்சி அலுவலக மேலாளர் முதலில் ஜூலை 10ம் தேதி அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார்.காலை, 6:30 மணிக்கு ஓபிஎஸ் கோஷ்டியை சேர்ந்தவர்கள் குவியத் தொடங்கினர். காலை 8 மணிக்கே இபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டனர்
கட்சி அலுவலகத்துக்குள் இருப்பவர்கள் குறித்து போலீசாருக்கு தெரியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பார்க்கலாம் என அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார்
மேலும் ஏதேனும் சமர்ப்பிப்புகள் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
அதிமுக தலைமையகத்திற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று துவங்கியது.
நேற்று 22 நபர்கள் நீக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 44 நபர்களை நீக்கினார் ஓபிஎஸ்.
முதல்வர் ஸ்டாலின் மேலும் சில நாட்கள் ஒய்வெடுக்க காவேரி மருத்துவமனை அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் இன்று அல்லது நாளை இல்லம் திரும்புவார் - மா. சுப்பிரமணியன்
எந்தெந்த கோவில்களில் ஆகம விதிகள் பின்பற்றப்படுகிறன என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களை அடையாளம் காண ஒரு மாத காலத்தில் குழு அமைக்க அரசுக்கு உத்தரவு.
செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். தொலைபேசியில் உடல் நலம் குறித்து விசாரித்த போது, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு, ஜூலை 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் தேதியுடன் அவகாசம் முடிந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிப்பதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது
அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்க உருவான எழுச்சி, அவரை முதலமைச்சராக்கவும் உருவாகும் என அவர் தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் இன்று 2,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாரும் உயிரிழக்கவில்லை.
மருது அழகுராஜ், வெல்லமண்டி நடராஜன், வெங்கட்ராமன், இரா கோபால கிருஷ்ணன், சையதுகான், ராமச்சந்திரன், சுப்பிரமணியன், அசோகன், ஓம் சக்தி சேகர், ரவீந்திரநாத், ஜெயபிரதீப், கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், வைரமுத்து, ரமேஷ், வினுபாலன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சைதை பாபு, அஞ்சுலட்சுமி ஆகியோர் நீக்கம்.
ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை நீக்கியதாக ஈபிஎஸ் அறிவிப்பு
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேரை அதிமுகவிலிருந்து நீக்கியதாக ஈபிஎஸ் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல்.
அதிமுக அலுவலகத்தில் சில் வைக்கப்பட்டதை அகற்றக் கோரிய வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைப்பு. ஈபிஎஸ், ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நாளை மதியம் 2:30 மணிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
குரங்கு அம்மை நோய் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம்.. குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோரை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் திட்டமிட்டபடி ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும். சில மாணவர்களால் தேர்வுக்கு செல்ல முடியவில்லை என்பதால் ஒட்டுமொத்தமாக நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்
இருதரப்பு மோதலில் ஈடுபட்டதால் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது - ஈபிஸ் தரப்பு
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கு விசாரணை தொடங்கியது. சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் வழக்கு தொடர்ந்துள்ளதாக வாதம்.
கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பரவியதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் டெல்லி பயணம்.. பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க நேரில் அழைக்கத் திட்டம்..
மேட்டூர் அணையின் நீர்மட்டம் காலை 4 மணி நிலவரப்படி 109.51 அடியாக உயர்வு
இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
நாளை முதல் அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மழை காரணமாக ஒகேனக்கல் பகுதியில் பலத்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது
நீலகரி மற்றும் உதகை இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்
ஊட்டியில் தொடரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் சேதம்
அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை
Background
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 54வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 102.63க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.24 ரூபாய்க்கும் இன்றும் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்
இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 47ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநில தேர்தல் நடைபெற்றதால் இதன் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று( ஜூலை 14) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது. தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -