Breaking LIVE : இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை மீட்க வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Breaking News LIVE Updates: இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..
கடந்த 10 ஆம் தேதி நாகையைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அகத்தியமலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே நீலகிரி, நிலாம்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆனை மலை காப்பகங்கள் ஏற்கெனவே உள்ள நிலையில், 5ஆவது காப்பகமாக அகத்தியமலை அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத் திருவிழாவில் மாட்டுக்கறி கடைபோட யாரும் அனுமதி கேட்கவில்லை என்றும் கேட்டால் அனுமதிப்போம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
18 வயதானவர்களுக்கு கார்பவேக்ஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் சென்னையில் தொடங்கியது. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் திட்டத்தை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லஷ்மணனின் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது.
கூடுதல் எஸ்.பி.கனகேஸ்வரி, காவல் ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமிக்கு மற்றும் எஸ்.ஐ செல்வராஜனுக்கு விருதுகள்.
திண்டுக்கல் : பழனி அருகே ஆயக்குடியில் தோட்டத்திற்குள் புகுந்த யானைகளை விரட்டும் பணி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது
ஈரோடு : பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசத்திற்கு இன்றுமுதல் தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.
உலகளவில் இதுவரை 59.29 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 56. 48 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இந்த கொடிய தொற்றால் இதுவரை 64.48 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
ஆடி மாத திருவிழாவையொட்டி அழகர்கோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளியுள்ள அழகரின் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக 315% சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்து சோதனை செய்து வருகின்றனர்.
நாமக்கலில் 24 இடங்களிலும், மதுரை, திருப்பூரில் தலா ஒரு இடம் என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பாஸ்கர் எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 4. 27 கோடி சொத்து சேர்த்ததாக புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.
Background
சென்னையில் 83ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.
2023 ஏப்ரல் முதல் பெட்ரோல் பங்குகளில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
அதன்பின் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விலையைக் குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார்.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -