Kumaravel Statement: வார விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமையில், சமூக வலைதளங்களில் ஒன்றான X தளத்தில் (BoycottNaturals) என்று டிரெண்ட் ஆகியது.
ஏன் டிரெண்ட் ஆகிறது என்று பார்க்கையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் கேள்வி எழுப்பியிருந்தார். அதில் ”வீர சாவர்க்கரின் பெருமை குறித்து ஐந்து வாக்கியங்களைச் சொல்லுமாறு இந்திய கூட்டணித் தலைவர்களுக்கு நான் சவால் விடுகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
டிரெண்ட்:
அதற்கு பதிலளிக்கும் விதமாக நேச்சுரல்ஸ் சலூனின் தலைமை நிர்வாக அதிகாரியான சி.கே.குமரவேலின் பதிவே Boycott Naturals டிரெண்டுக்கு காரணமாகும். சாவர்க்கரை பற்றிய அவர் X தள பதிவே இதற்கு காரணம் என கண்டறிய முடிந்தது. என்ன நடந்தது என்று சற்று விரிவாக பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, வீர் சாவர்க்கரின் பெருமை குறித்து ஐந்து வாக்கியங்களைச் சொல்லுமாறு இந்திய கூட்டணித் தலைவர்களுக்கு நான் சவால் விடுகிறேன் என்ற பிரதமர் மோடி கருத்துக்கு, சில கருத்துக்களை குமரவேல் தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்ததாவது,
சாவர்க்கர் ஒரு "கோழை",
"காந்தி கொலையில் கூட்டு சதிகாரர்",
"கருணை மனுக்களை எழுதுவதில் வல்லவர்
காந்தி கொலையில் "மனநலம் குன்றிய" கோட்சேவை சாவர்க்கர் "மூளைச் சலவை" செய்தார்,
"இந்துத்துவா வெறி பிடித்தவர்" என்று 5 கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்கள் :
இந்த கருத்தானது சமூக வலைதளங்களில் பற்ற ஆரம்பித்த ஆரம்பித்தது. அதில் சிலர் நேச்சுரல் சலூனுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்துக்களுக்கு எதிரான கடை என்றும் தெரிவிக்க ஆரம்பித்தனர். ஒரு பயனர் தெரிவித்ததாவது, "இனி நேச்சுரல்ஸ் சலூனில் கால் வைக்க வேண்டாம்” எனவும் தெரிவித்திருந்தார்.
மற்றொருவர், “அனைத்து இந்துக்களே, நேச்சுரல்ஸ் சலூனுக்கு செல்வதை நிறுத்துங்கள். அந்த கடையின் நிறுவனர் இந்து விரோதி” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், Boycott Naturals என்ற ஹேஷ்டாக் டிரெண்டாக ஆரம்பித்தது.
வேலையை விரும்பினால் வாருங்கள்:
எதிர் கருத்துக்கள் வருவதை கண்ட குமாரவேல், மேலும் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.
அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, “எங்கள் ஹேர் ஸ்டைலிஸ்ட்களின் வேலையை நீங்கள் விரும்பினால், மீண்டும் வாருங்கள். எங்கள் சேவைகள் பணத்திற்கான மதிப்பைக் கண்டால்? மீண்டும் வாருங்கள். இல்லை என்றால் மாற்று வழிகளை யோசித்து கொள்ளுங்கள்” என்றார்.
"பைலட்டுக்கு ஒரே அரசியல் தொடர்பு இருப்பதால் மட்டுமே நீங்கள் விமானத்தில் ஏறுவீர்களா அல்லது மருத்துவருக்கும் ஒரே மத நம்பிக்கை இருப்பதால் மட்டுமே இதய அறுவை சிகிச்சை செய்வீர்களா?" என்று பொருள்படும் வகையில் ஆங்கிலத்தில் சி.கே.குமாரவேல் தனது எக்ஸ் தளத்தில் ( முன்னர் ட்விட்டர் தளம் ) பதிவிட்டார்.
குமரவேல் முன்பு கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்) கட்சியில் இணைந்தார். இருப்பினும், ஒரு வருடம் கழித்து 2019 இல், அவர் உட்கட்சி அரசியலை காரணம் காட்டி கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.