பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 93 ஆயிரத்து 249 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 49 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Continues below advertisement


இந்நிலையில் பாலிவுட்டில் இது கொரோனாக்காலம் என்று கூறும் அளவிற்கு தொடர்ச்சியாக பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு நடிகர் மாதவன், அமீர்கான், கார்த்திக் ஆர்யன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் அக்ஷய் குமாருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 


<blockquote class="twitter-tweet"><p lang="und" dir="ltr">🙏🏻 <a >pic.twitter.com/w9Q7m54BUN</a></p>&mdash; Akshay Kumar (@akshaykumar) <a >April 4, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் பெற்றுவருகின்றேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். என்பர் கூறியுள்ளார்.