தமிழ்நாட்டின் ஆளும் தி.மு.க. அரசின் ‘ஒன்றியம்’ என்னும் நிலைப்பாட்டுக்குத் தொடர்ந்து விமர்சனம் எழுப்பி வருகிறது மாநில பாரதிய ஜனதா கட்சி. இனி ’தமிழகம்’ இல்லை ‘தமிழ்நாடு’, ‘மத்திய அரசு’ இல்லை’ ஒன்றிய அரசு’ எனத் தனது அறிக்கைகளில் அரசு திருத்தம் செய்து வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக இதுகுறித்துத் தீவிரமாக விமர்சித்து வருகிறது. அண்மையில் இதுகுறித்து ட்வீட் செய்திருந்த அந்தக் கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, ‘ஒரு இயந்திரத்தை குதிரைத்திறனில் குறிப்பிடுகிறோம்.அப்படியானால் குதிரையும் இயந்திரமும் ஒன்றா. குதிரை இயற்கையானது உயிரோட்டம் உள்ளது. தானாக செயல்படும்.ஆனால் குதிரைத்திறனில் செயல்படும் இயந்திரம் தானாக செயல்பட முடியாது.அதை ஒருவர் இயக்க வேண்டும். இதுபோன்றதே இன்றைய union (ஒன்றிய) சர்ச்சை’ என விமர்சித்திருந்தார். 






அந்த வரிசையில், தற்போது அந்தக் கட்சியின் உறுப்பினர் குஷ்புவும் அதுகுறித்து விமர்சித்துள்ளார். அதுபற்றிய அவரது ட்வீட்டில்,‘மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதில் பெருமை கொள்பவர்கள்தான் முன்பு மத்திய அரசின் அங்கமாகப் பதவி முதல் பணம் வரை அனைத்தையும் அனுபவித்தார்கள்.துரதிர்ஷ்டவசமாக மத்தியில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தவர்களும் இப்படிப்பட்டவர்களின் இந்த ஒன்றிய நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்கள்.ஆனால் எதிர்கட்சியாகப் பல ஆண்டுகள் இருந்தாலும் நாங்கள் மத்திய அரசு எனச் சொல்வதில்தான் பெருமை கொள்கிறோம். இதை மறந்து  அழுக்கு அரசியல் செய்யும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இது 'பாரத பேரரசு' என்பதை நினைவூட்டுகிறோம். உங்களுக்கு இது புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்’ என பதிலடி கொடுத்துள்ளார். 


முன்னதாக பாரதிய ஜனதாவின் கே.டி.ராகவன், 'இனி தமிழ்"நாடு"னு தான் அழைப்போம் தமிழகம்ன்னு அழைக்கமாட்டோம் மத்திய அரசுனு சொல்ல மாட்டோம்- திமுக குரூப்ஸ் 
"அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடு காடு"னு 1960 களில் முழங்கிய திமுக தலைவர்கள் இப்போது யாராவது இருந்தால் அவர்களிடம் கேட்டுப்பாருங்க.அந்த பிரபல முழக்கம் ஏன் விட்டுடீங்கனு’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். 






மேலும் அந்தக் கட்சியின் பேச்சாளர் நாராயணன் திருப்பதி அளித்த பேட்டி ஒன்றில், ‘யூனியன்' என்ற ஆங் கில சொல்லுக்கு, ஒன்றி யம் என்று அகராதி சொல்கிறது. எனவே, தவறல்ல. அது ஆனால், ஆங்கிலத்தில் ஒரு தனி வார்த்தைக்கும், வேறு சில சொற்களை இணைத்து சொல்லப்படும் போது, அதன் பொருளுக்கும் உள்ள வேறுபாட்டை, பொது அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வர். இந்திய அரசியலமைப்பு சட்டம், 'இந்தியா என்கிற பாரதம் பல மாநி லங்கள் ஒன்றடங்கிய,நாடாக இருக்கும்' என்று, தெளிவாக குறிப்பிடுகிறது. மாநிலங்களோடு செய்துகொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில், இந்தியா இணையவில்லை.எனினும், இந்தியா கூட்டாட்சி முறையிலான நாடாக இருக்க முடிவெடுத் தது என்பதை, அரசியல மைப்பு சட்ட வரைவுக்குழு தெளிவுப்படுத்துகிறது. எந்த மாநிலத்திற்கும், இந்தியாவிலிருந்து பிரிவதற்கு உரிமையில்லை. நிர்வாக வசதிக்காக, இந்த நாடும், நாட்டு மக்களும், பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டாலும், இந்தியா ஒரே நாடு தான்’ எனக் கருத்து கூறியிருந்தார். 


Also Read: கோயில் நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இல்லாமல் அகற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு