”பா.ஜ.க.வினர், ஆர்.எஸ்.எஸ்.- அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாசிஸ்ட்; உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பற்றியெல்லாம் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.” என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பா.ஜ.க.வை சாடியுள்ளார்.
பரபரப்பான மகாராஷ்டிரா அரசியல் சூழலில் பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் நிதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (மே,11,2023) தீர்ப்பு வழங்கியது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமலேயே உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்ததால் அதற்கு முந்தைய நிலையை மீண்டும் கொண்டு வர உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமைஅ நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீப்பளித்தது.
செய்தியாளர் சந்திப்பில் இந்த தீர்ப்பு குறித்து அசோக் கெய்லாட் பா.ஜ.க.-வை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அசோக் கெலாட் கூறுகையில்,” பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்கள் பாசிஸ்ட், அவர்கள் உச்சநீதிமன்றம் சொல்வது பற்றியெல்லம் கவலைப்படுவர்கள் கிடையாது.மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தின. அதே நிலை ராஜஸ்தானிலும் இருந்தது. ஆனால், ராஜஸ்தான் தப்பித்து விட்டது. இதுபோன்றவர்களிடமிருந்து மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும். ” என அவர் குறிப்பிட்டார்.