Hitler Udhayanidhi: ஹிட்லரும் உதயநிதியும் ஒன்னுதான்.. சனாதன தர்மம் சர்ச்சையில் பாஜக தடாலடி கருத்து

சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிராக சனாதனம் உள்ளது என்றும் டெங்கு, மலேரியா நோயை போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் உதயநிதி கூறியிருந்தார்.

Continues below advertisement

சனாதன தர்மம் குறித்து தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியின் விமர்சனம் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்த்து கடுமையாக பேசியிருந்தார். சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிராக சனாதனம் உள்ளது என்றும் டெங்கு, மலேரியா நோயை போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Continues below advertisement

சர்ச்சையை கிளப்பிய சனாதன தர்மம் விவகாரம்:

ஆனால், உதயநிதியின் இந்த கருத்தை எக்ஸ் வலைதளத்தில் திரித்து பதிவிட்ட பாஜக தேசிய ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, "இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக" கூறினார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்து மக்களுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசுவதாக கருத்து பரவியது.

சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியது வெறுப்பு பிரச்சாரம் என ஒரு தரப்பும், சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராகத்தான் அவர் பேசியுள்ளார் என மற்றொரு தரப்பும் வாதிட்டு வருகிறது. உதயநிதிக்கு எதிராக பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வரும் நிலையில், காங்கிரஸ் தொடங்கி மம்தா பானர்ஜி வரை, இதில் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் தங்களின் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ள நிலையில், தான் சனாதன தர்மத்தை மதிப்பதாகவும் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.

உதயநிதியை ஹிட்லருடன் ஒப்பிட்ட பாஜக:

இந்த நிலையில், உதயநிதியை ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ள பாஜக காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இதுகுறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு, "ஹிட்லர் யூதர்களை எப்படிக் குறிப்பிட்டார் என்பதற்கும் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை விவரித்ததற்கும் இடையே ஒரு வினோதமான ஒற்றுமை உள்ளது.

ஹிட்லரைப் போலவே உதயநிதி ஸ்டாலினும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். நாஜி வெறுப்பு எப்படி ஹோலோகாஸ்டுக்கு (இனப்படுகொலைக்கு) இட்டு சென்று, சுமார் 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்களையும், குறைந்தது 5 மில்லியன் சோவியத் போர்க் கைதிகளையும் பிற பாதிக்கப்பட்டவர்களைக் கொன்றது என்பதை நாங்கள் அறிவோம்.

உதயநிதி ஸ்டாலினின் கருத்து அப்பட்டமான வெறுப்பு பேச்சு.  சனாதன தர்மத்தை பின்பற்றும் பாரதத்தின் 80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பித்தத்திற்கு காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பது அதிருப்தி அளிக்கிறது" என பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: One Nation One Election Explainer: கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதா? சட்டம் சொல்வது என்ன?

Continues below advertisement
Sponsored Links by Taboola