காஷ்மீரில் பிடிபட்ட லஷ்கர் இ தாய்பா தீவிரவாதிகளில் ஒருவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்பதை அந்த மாநில பாரதிய ஜனதா தலைவர் ரவீந்தர் ரய்னா மறுத்துள்ளார். காஷ்மீரில் அண்மையில் பிடிப்பட்ட இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் தலிப் ஹுசை ஷா. இவர் காஷ்மீர் பாரதிய ஜனதாவின் சிறுபான்மையினர் செல் தலைவராக இருந்தார் எனத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்தத் தகவல் முற்றிலும் தவறானது என்றும் பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புகள் பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம்சாட்டுவதை புதிய் யுத்தியாக கையாண்டு வருகின்றன என்றும் அந்த மாநில பாரதிய ஜனதா தலைவர் ரய்னா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தலிப் பாரதிய ஜனதா அலுவலகத்துக்கு இரண்டு முறை வந்துள்ளார் என்றும்.அவர் நேர்காணல் செய்யவே வந்தார் என்றும் அவருடன் வேறு சிலரும் வந்ததாகவும் ரய்னா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக,
ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கிராம மக்களால் பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த காவல் அதிகாரி ரியாஸ் அகமது கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஜுனைத் ஷீர்கோஜ்ரி என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
இதேபோல் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடைபெற்றது. இதில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாசில் நசீர் பட் மற்றும் இர்பான் அஹ் மாலிக் இருவரும் கொல்லப்பட்டனர். இவர்களும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீநகரின் க்ரீஸ்பால் பால்போரா சங்கம் பகுதியில் நடைபெற்ற என்கவுண்டர் தாக்குதலில் அடில் பர்ரே என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் பொதுமக்களும்,காவல் துறையினரும் சற்று நிம்மதியடைந்தனர்.