ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது பிஜூ ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவர் எம்.எல்.ஏ. பிரசாந்த குமார் ஜக்தேவ். இவர் கடந்தாண்டு கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்ப்பட்டார். தற்போது வரை இடைநீக்கத்திலே உள்ளார்.


இந்த நிலையில், அந்த மாநிலத்தின் குர்தா மாவடத்தில் உள்ள பனாபூர் பகுதிக்கு எம்.எல்.ஏ. ஜக்தேவ் சென்றுள்ளார். சிலிகா தொகுதியின் எம்.எல்.ஏ.வான பிரசாந்தகுமார் ஜக்தேவிற்கும், அப்பகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சியினருக்கும் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது முதல் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.




இந்த நிலையில், குர்தா மாவட்டத்தின் பனாபூர் பகுதியில் எம்.எல்.ஏ. ஜக்தேவை கண்டித்து எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவர்கள் எம்.எல்.ஏ. ஜக்தேவை அவரது லேண்ட்ரோவர் காரில் வந்தபோது மறித்தனர். அவர்களை வழியை விடுமாறு எச்சரித்த ஜக்தேவ், வழியை விடாவிட்டால் காரை ஏற்றிவிடுவேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.


அதன்பின்னர், எம்.எல்.ஏ. ஜக்தேவ் மக்கள் மீது தான் வந்த லேண்ட் ரோவர் சொகுசு காரை ஏற்றினார்.





திடீரென எதிர்பாராது நிகழ்ந்த இந்த சம்பவத்தால் 22க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் காரை சரமாரியாக தாக்கியதுடன், எம்.எல்.ஏ. ஜக்தேவையும் தாக்கியுள்ளனர். பின்னர், போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காரை எம்.எல்.ஏ. ஜக்தேவே ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ. ஜக்தேவ் காரை மோதியதால் 7 போலீசாருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




உத்தரபிரதேசத்தின் லக்கிம்பர் சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை கடந்தாண்டு ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒடிசாவில் அதேபோன்று ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது அனைவருக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. ஜக்தேவ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண