ஒவ்வொரு ஆண்டும் பாரத் ரத்னா பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த நாளை நினைவு கூரும் விதமாக ஏப்ரல் 14ஆம் நாள் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில்[5] 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். 


இதனை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.


அந்த வாழ்த்துச் செய்தியில்," இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்த நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


அவரது எழுச்சியூட்டும் வாழ்க்கை முழுவதும், டாக்டர் அம்பேத்கர் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையில், தனது தனித்துவமான பாதையை வகுத்தார் மற்றும் அவரது அசாதாரண மற்றும் பன்முக சாதனைகளுக்கு பாராட்டுகளைப் பெற்றார்.


மனித உரிமைகளுக்காக அவர் தீவிரமாக குரல் கொடுத்தார். நாட்டின் பின்தங்கிய மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் அவர்களிடையே கல்வியை பரப்புவதற்கும் ‘பஹிஷ்கிருத ஹிடகரினி சபையை’ அமைத்தார். சிறந்த மற்றும் நியாயமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் விரும்பினார். அதற்காக தனது வாழ்க்கை முழுவதும் போராடினார். ஜாதி மற்றும் இதர காரணங்களின் பாகுபாடு இல்லாமல், பல நூற்றாண்டுகளாக பின்தங்கிய நிலையில் இருந்த பெண்கள் மற்றும் சமூகத்தினர் சம அளவிலான பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அனுபவிக்கும் நவீன இந்தியாவை உருவாக்க அவர் விரும்பினார்.


டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளில், அவரது வாழ்க்கையை கற்பதன் மூலம், நமது வாழ்வில் அவரது கொள்கைகளை பின்பற்றவும் மற்றும் வலுவான, வளமான இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களிக்கவும் தீர்மானிப்போம்" என்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.