பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், மூன்று வருடங்களான காதலைத் தொடர்ந்து, தற்போது திருமணம் செய்து கொண்டனர்.


இது, மிகவும் பேசு பொருளாக மாறியுள்ளதற்கு காரணம்,  அத்தை - மருமகள் ஆகிய உறவுமுறையை கொண்ட இருவர் திருமணம் செய்ததுதான். ஒரே பாலின திருமணம் சில இடங்களில் நடைபெறும் நிலையில், அத்தை-மகள் திருமணம் புதிதாக பார்க்கப்படுகிறது. 


திருமண வீடியோ:


 இவர்கள் திருமணம் செய்து கொண்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில, உள்ளூர் கோயிலில் கழுத்தில் தாலி கட்டி, மாலைகளை பரிமாறி இந்து முறைப்படி  திருமணம் செய்வதை பார்க்க முடிகிறது.


நடுத்தர வயதுப் பெண், கணவரை விட்டுவிட்டு மருமகளுடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தற்போது திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.






உலகமே எதிர்த்தாலும் கவலையில்லை:


 ஒரு பெண்ணை, குறிப்பாக அவரது சொந்த மருமகளை திருமணம் செய்து கொள்வதற்கான காரணம் குறித்து அவரது அத்தை தெரிவிக்கையில், மருமகளை ( Niece ) ஆழமாக காதலிப்பதாகவும், அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டால், அவளை இழப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஒருவரையொருவர் பிரிய நேரிடும் என்ற இந்த பயம்தான், திருமணம் செய்யவைத்தது.


உலகம் என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படாமல், திருமணம் செய்து கொள்ள எங்களைத் தூண்டியது, எங்கள் காதல்தான் என அவரது அத்தை தெரிவித்தார்.


அவரது மருமகளும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார். உலகம் என்ன சொல்லும் என்று கவலையில்லை என்று இருவரும் தெரிவித்துள்ளனர். 


அவர்களது திருமண வீடியோவை பகிர்ந்து, அவர்களது குடும்பத்தினரிடம் திருமணத்தை அறிவித்தனர். இவர்கள் திருமணத்திற்கு, அப்பகுதியில் பெரும் எதிர்ப்பு எழுவதாக கூறப்படுகிறது. மேலும், திருமணத்தை ரத்து செய்யாவிட்டால் போராட்டத்தை நடத்துவோம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Also Read: கூடையில் மலைப்பாம்பு, அரியவகை குரங்கு, அணில்... தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விசிட்! விமானநிலையத்தில் பரபரப்பு