பீகாரின் முசாஃபர்பூரில் உள்ள கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஒருவர், மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காததால் கடந்த 2019 செப்டம்பரில் பணியில் சேர்ந்ததில் இருந்து தான் பெற்ற மொத்த சம்பளம் ரூ. 24 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளார். 


முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நிதிஷ்வர் கல்லூரியில் ஹிந்தி பாடத்தை கற்பித்து வருபவர் உதவிப் பேராசிரியர் லாலன் குமார், கடந்த 2019 செப்டம்பரில் பணியில் சேர்ந்ததில் இருந்து என் வகுப்பறைக்கு மாணவர்கள் யாரும் தனது வரவில்லை என்றும் துறையில் சேர்ந்த மாணவர்களுக்கு பாடம் கற்பிக்காத நான் ஏன் சம்பளத்தை ஏற்க வேண்டும்? என்றும் தெரிவித்தார்.


மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்கவில்லை. இதனால் சும்மா சம்பளம் வாங்க மனசாட்சி அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துதான் பணியில் சேர்ந்ததில் இருந்து தான் பெற்ற மொத்த சம்பளம் ரூ. 24 லட்சத்தை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு காசோலை மற்றும் கடிதம் அனுப்பி தனது சம்பளத்தை திருப்பி அளித்துள்ளார்.


ஜேஎன்யுவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த டாக்டர் லாலன் குமார் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் எம்.பில். மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுகுறித்து அவர் துணைவேந்தருக்கு எழுதிய கடித்ததில், "நான் சேர்ந்தபோது, முதுகலை வகுப்புகளுக்குக் கற்றுக்கொடுக்கும் கல்லூரியில் நான் பணியமர்த்தப்படவில்லை. குறைந்த ரேங்க் பெற்றவர்களுக்கு அந்த பொறுப்புகள் வழங்கப்பட்டது. இங்கே, நான் பணியமர்த்தப்பட்ட இடத்தில் மாணவர்கள் வரவே இல்லை. பலமுறை இடமாற்றம் கேட்டும் எனக்கு மறுக்கப்பட்டது. எனது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்குவேன்” என்று தெரிவித்துள்ளார். 


பீகாரில் உயர் இடைநிற்றல் விகிதங்கள் : 


 இந்தியாவில் தொற்றுநோய் பரவல் காரணமாக கல்வி நிறுவனங்களை ஆன்லைன் கற்றல் முறைக்கு மாறப்பட்டது. தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் ஆஃப்லைன் வகுப்புகளை மீண்டும் தொடங்க முடிவு செய்தன. 


அதன்பிறகு தொடர்ச்சியாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் இருந்து நிற்க தொடங்கினார். இடைநிற்றல் விகிதத்தைக் கட்டுப்படுத்த, பீகார் கல்வித் துறை அனைத்து மாணவர்களும் உயர்நிலைக் கல்வியை அடையும் வரை கண்காணிக்க ஒரு தரவுத்தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை மீண்டும் வகுப்பறைகளுக்குக் கொண்டுவருவதற்காக மாநிலக் கல்வித் துறையும் பீகார் முழுவதும் சேர்க்கை இயக்கத்தை ஏப்ரல் மாதம் தொடங்கியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண