மருத்துவ உலகில் சில நேரங்களில் மிகவும் அதிர்ச்சியான விஷயங்கள் நடப்பது உண்டு. அவை மருத்துவர்களையே அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் அமைந்துவிடும். அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. 40 நாள் குழந்தை வயிற்றில் கரு ஒன்று உருவாகியுள்ள சம்பவம் மருத்துவர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பீகார் மாநிலம் மோதிஹரி பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அக்குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்தக் குழந்தையின் வயிற்று பகுதி சற்று அதிகமாக வளர்ந்துள்ளது. அதன்காரணமாக அக்குழந்தை சரியாக சிறுநீர் கழிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 


இதன்காரணமாக அக்குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அக்குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று உருவாகியிருந்துள்ளது. இது மருத்துவ உலகில் ’fetus in fetu’ என்று அரிய வகை பாதிப்பாக கருதப்படுகிறது. அதாவது அக்குழந்தை தன்னுடைய தாயின் கருவில் வளர்ந்து கொண்டிருந்த போது அக்குழந்தையின் வயிற்றில் ஒரு கரு வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 


இந்த அரிய வகை பாதிப்பு 10 லட்சம் பேரில் 5 பேருக்கு மட்டுமே ஏற்படும் என்று ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த அரிய வகை பாதிப்பை முதல் முறையாக 19ஆம் நூற்றாண்டில் மெக்கேல் என்பவர் கண்டுபிடித்தார். இந்த அரிய வகை பாதிப்பு சரியாக சிகிச்சை அளிக்காமல் விட்டால் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். 


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தையின் வயிற்றில் இருந்த கருவை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அக்குழந்தை நன்றாக குணம் அடைந்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. பிறந்து 40 நாட்களேயான குழந்தையின் வயிற்றுக்குள் கரு ஒன்று உருவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க:மத்திய அரசுக்கு தொடர் நெருக்கடி... பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க சட்ட முன்வரைவு....மம்தா பானர்ஜி அதிரடி




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண