பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது மொய்தரி மாவட்டம். இந்த மாநிலத்தில் உள்ள சாகியா ரயில் நிலையம். இந்த வழித்தடத்தில் எப்போதும் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கும். இந்த நிலையில், நேற்று அந்த வழித்தடத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தின் இடையே பெண் ஒருவர் படுத்து இருப்பதை லோகோ பைலட் பார்த்துள்ளார்.
இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய தூக்கம்:
இதையடுத்து, உடனடியாக சுதாரித்த லோகோ பைலட் ரயிலை அவசர கால ப்ரேக் மூலம் நிறுத்தியுள்ளார். சரியாக அந்த பெண்ணின் தலைக்கு சில இஞ்ச் முன்பாக ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, லோகோ பைலட் மற்றும் அவருடன் இருந்த சக பைலட் அந்த பெண்ணை எழுப்பினார்கள்.
அந்த பெண் தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்தது. அப்போது, அந்த பெண்ணிடம் அவர்கள் விசாரித்தனர். அந்த பெண் ஒரு கல்லூரி மாணவி என்று தெரியவந்துள்ளது. அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தண்டவாளத்தில் படுத்துள்ளார். வழக்கமாக அந்த நேரத்தில் வர வேண்டிய ரயில் தாமதமாக வந்துள்ளது. இதனால், அந்த பெண் தற்கொலைக்குச் சென்ற இடத்தில் அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டார்.
தற்கொலை முயற்சி:
தாமதமாக வந்த ரயிலின் லோகோ பைலட் ரயிலை நிறுத்தி அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார். அந்த பெண் உள்ளூர்கார பெண் என்றும் தெரியவந்தது. அவர்களிடம் அந்த பெண் தன்னை தனியாக விடுங்கள் என்றும், தான் தற்கொலைக்கு முயற்சிக்கிறேன் என்றும் கத்தியுள்ளார். பின்னர், அந்த பெண்ணை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால், அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு அந்த ரயில் புறப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி
எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)