பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி, மூன்று சிறுமிகளை கடந்த மூன்று ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் குற்றம் சாட்டப்பட்ட 54 வயதுடைய சிங்ராஜ் நகர் என்பவர் தனியார் மருத்துவமனையின் பாதுகாவலர் ஆவார். இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினரைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர். இந்நிலையில் திங்கட்கிழமை சிங்ராஜ் குறித்து போலீசார் தெரிவிப்பதாவது, “சிறுமிகளையும், இளம் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்று, உடல்களை ஆக்ரா கால்வாயில் வீசிய உள்ளார் சிங்ராஜ். காவல்துறைக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்.
ஜனவரி முதல் வாரத்தில், 21 வயது பெண்ணைக் கொன்று, கால்வாயில் வீசியுள்ளார். பின்னர் இரண்டு நாட்களுக்குப் பிறகு உடல் புதர்களில் சிக்கி இருப்பதை சிங்ராக் அறிந்துகொண்டார். பின்னர் பெண்ணின் பாட்டியிடம் தான் கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.
சிங்ராஜ் குறித்து அந்தப் பெண்ணின் பாட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுத்த பிறகு அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், சிங்ராஜ் 2019 முதல் மூன்று இளம் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது போலீசாரிடம் தெரிவித்தார்.
இறுதியாக உயிரிழந்த பெண்ணும், சிங்ராஜும் சில வருடங்களாகப் பழகி வந்தனர். டிசம்பர் 31 அன்று, அவர் அவரை தனது சைக்கிளில் ஃபரிதாபாத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள தனது கிராமமான ஜசானாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இரண்டு நாட்கள் அறையில் வன்கொடுமை செய்துள்ளார். இறுதியாக, அவரது கழுத்தை நெரித்துக்கொன்று, ஆக்ரா கால்வாயில் உடலை வீசியுள்ளார்" என்று ஃபரிதாபாத் டிசிபி நரேந்தர் கடியான் கூறினார்.
டிசம்பர் 2019 இல், சிங்ராஜ் ஒரு டீ கடை உரிமமையாளரின் 15 வயது மகளையும் வன்கொடுமை செய்து கொன்றுள்ளார்.
ஆகஸ்ட் 2020 இல், வீட்டு வேலை செய்யும் பெண்ணின் சகோதரியை மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்துகொன்று, அவரது உடலையும் கால்வாயில் வீசியுள்ளார் சிங்ராஜ்.
ஜூன் 2021 இல், மற்றொரு சிறுமியையும் மீண்டும் இவ்வாறே செய்து கொன்றதாக டிசிபி கூறினார்.
சென்ற வாரம் நடந்த சம்பவத்தில் பலியான 21 வயதுடைய பெண்ணின் சடலம் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டது தற்போது சிங்ராஜை தீவிரமாக விசாரித்து வருகிறோம். விரைவில் இவரது வழக்குகள் முடிவுக்கு வரும் என நம்புகிறோம்" என்று டிசிபி தெரிவித்தார்.
1986-ஆம் ஆண்டில், சிங்ராஜ் தனது மாமா மற்றும் உறவினரைக் கொன்ற வழக்கின் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.