Bhojpuri Singer : பீகாரில் 13 வயது சிறுமியை போஜ்புரி பாடகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாடகர்
பாலிவுட், கோலிவுட் திரையுலகைப் போலவே பீகாரில் போஜ்பூரி மொழியை அடிப்படையாகக் கொண்டு சினிமா துறை இயங்கி வருகிறது. போஜ்பூரி திரை உலகில் பல நட்சத்திரங்கள், இசை கலைஞர்கள் என பலர் உள்ளனர். இந்த போஜ்பூரி திரையுலகில் பிரபல இளம் பாடகராக இருப்பவர் பபுல் பீகாரி என்ற அபிஷேக் (21). இவர் தனியாக ஒரு யூடியூப் சேனலை வைத்திருக்கிறார். இதில் இவரை சுமார் 27 ஆயிரம் நபர்கள் பின் தொடர்கிறார்கள். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், ராஜீவ்நகர் என்ற பகுதியில் வசித்து வந்தபோது, 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
இதனை அடுத்து, சிறுமியிடன் நன்றாக பழகி அவரை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஆசையாக பேசி வந்துள்ளதாக தெரிகிறது. இப்படி இருக்கும் நிலையில், ஒரு நாள் சிறுமியை ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்துச் சென்று அபிஷேக் அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சிறுமியுடன் புகைப்படங்களும் எடுத்து இருக்கிறார். ஆனால் இந்த சம்பவத்தை சிறுமி யாரிடம் சொல்லாமல் இருந்திருக்கிறார். மேலும், அந்த சிறுமி அபிஷேக்குடன் இடைவெளியை கடைபிடித்து இருந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், அந்த சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதனை பார்த்து சிறுமி அதிர்ச்சி அடைந்து, அவரது பெற்றோருக்கு இது பற்றி தெரிவித்திருக்கிறார்.
கைது
இதனை அடுத்து, உடனடியாக காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பாடகர் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 13 வயது சிறுமியை பாடகர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க
Thalapathy 68: 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் ஜோதிகா..? ரசிகர்கள் குஷி..!