பொறுத்தால் பூமி ஆள்வார் என்பது பழமொழி. பூமி ஆள்வார்களோ இல்லையோ பங்குச் சந்தையை ஆள்வார்கள் என்பதற்கு பாரத் ரசாயன் பங்குகள் உதாரணமாகியுள்ளன. பாரத் ரசாயன் அக்ரி நிறுவனத்தின் ரசாயனப் பங்குகள் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு பங்கின் அளவு 20 ரூபாயில் இருந்து 9895 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது சுமார் 500 மடங்கு வளர்ச்சி.
பாரத் ரசாயன் பங்கு விலை வரலாற்றின்படி, கடந்த 6 மாதங்களில் அதன் ரசாயனப் பங்குகள் விற்பனை கடும் அழுத்தத்தில் உள்ளன. கடந்த 6 மாதங்களில், இந்த பங்கின் விலை சுமார் 12682 ரூபாயிலிருந்து ரூபாய் 9985 வரை குறைந்தது, இந்தக் காலகட்டத்தில் சுமார் 20 சதவீத சரிவை இந்த ரசாயனப் பங்குகள் சந்தித்துள்ளன.
கடந்த ஓராண்டில், மல்டிபக்கர்(Multibagger stocks) பங்கு சுமார் 8,710 ரூபாயிலிருந்து ரூபாய் 9985 வரை உயர்ந்து, அதன் பங்குதாரர்களுக்கு சுமார் 15 சதவிகித லாபத்தை அளித்தது. கடந்த 5 ஆண்டுகளில், பாரத் ரசாயன் பங்கின் விலை சுமார் 1910 ரூபாய் முதல் 9985 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த வளர்ச்சி என்பது கிட்டத்தட்ட 425 சதவிகிதம் வரையிலான உயர்வு. இதேபோல கடந்த 10 ஆண்டுகளில் பாரத் ரசாயன் பங்கின் விலை ஒரு பங்கின் அளவு 110 ரூபாயிலிருந்து 9985 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது, இந்த காலகட்டத்தில் அதன் பங்குதாரர்களுக்கு 8975 சதவிகிதம் வரை வருமானத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை அண்மைக்காலமாக பல நிறுவனங்கள் லிஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சப்பையர் ஃபுட் நிறுவனம் லிஸ்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.