Bharat Jodo Yatra: காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை (இந்திய ஒற்றுமை யாத்திரை) "மிகக் கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள்" என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியதை அடுத்து யாத்திரை இன்று ரத்து செய்யப்பட்டது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 12 கிலோமீட்டர் நடக்க இருந்த ராகுல் காந்தி 11 கிலோமீட்டர் தூரத்தினை கடந்த பிறகு பாதுகாப்பு காரணங்களால் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து, ராகுல் காந்தி காஷ்மீருக்குச் செல்லும்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் கூட்டம் அவருக்காகக் காத்திருந்ததாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ”பாதுகாப்புப் பணியாளர்களை திடீரென திரும்ப பெற்றுக்கொண்டது". இது கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது, மேலும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கூட்டத்தை சரியாக கையாளாமல், தவறாக நிர்வகித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்ரீநகர் செல்லும் வழியில் உள்ள பனிஹால் சுரங்கப்பாதையை ராகுல் காந்தி கடந்ததும், ஏராளமான மக்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது அதோடு போதிய பாதுகாப்பு இல்லாததால், யாத்திரையை திடீரென நிறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.