திருவனந்தபுரம்: ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் இன்று(செப்.,11) காலை 7 மணியளவில் கேரளாவிற்குள் சென்றுள்ளார். 


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கடந்த 7 ம் தேதி ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பாதயாத்திரையை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து துவக்கினார்.  இந்த யாத்திரையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து துவக்கி வைத்தார். நேற்று கன்னியாகுமரி மாவட்ட எல்லையான படந்தாலுமுட்டில் ராகுல் காந்தி தனது ப்யணத்தை தமிழகத்தில் நிறைவு செய்தார்.


தொடர்ந்து 5வது நாள் யாத்திரையை அங்கிருந்து துவக்கிய ராகுல்காந்தி, பராசலா வழியாக கேரள தலைநகர் திருவனந்தபுரம் வந்தடைந்தார். கேரள மற்றும் தமிழக எல்லையில், ராகுல்காந்தியை, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் தாரிக் அன்வர்,  சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சதீசன், கேசி வேணுகோபால், சசி தரூர், உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர். ராகுலை வரவேற்க ஏராளமான தொண்டர்களும் கூடினர். பரசழா பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்ற ராகுல் காந்தி டீ குடித்தார். டீயை வாங்கி ரசித்து குடித்த ராகுல் காந்தி டீ மிகவும் நனறாக இருப்பதாக பாராட்டினார்.


பயண திட்டம்


பாரத் ஜோடோ யாத்ரா’ பாத யாத்திரையில், கேரளாவில் இன்று மதியம் நெய்யடின்காரா அருகேயுள்ள  தேசதந்தை மஹாத்மா காந்தியின் நண்பரான ராமச்சந்திரனின் வீடு அமைந்துள்ள ஊருட்டுகாலா மாதவி மந்திரில் நிறைவு செய்கிறார். பின்னர் அங்கிருக்கும் காந்தி அருங்காட்சியகத்தை பார்வையிடும் ராகுல் காந்தி, அதன் பின்னர் அங்குள்ள நெசவாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மாலை 4 மணியளவில் நெய்யடின்காராவில் உள்ள மூனு கால்லின் மூடு எனும் பகுதியில் பாத யாத்திரையை துவக்கும் ராகுல் காந்தி, நெமமில் பகுதியில் இன்றைய யாத்திரையை நிறைவு செய்கிறார்.


அதேபோல், நாளை காலை 7 மணிக்கு நெமோம் பகுதியில் பாத யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி,  பட்டோம் வரையில் பாத யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார்.  நாளை மாலை பட்டோமில் பாத யாத்திரையை தொடங்கி கலக்கோட்டம் வரை  ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்கிறார்.


13ம் தேதி காலை கலக்கோட்டத்தில் தொடங்கி  மாமம் வரை பாத யாத்திரை மேற்கொல்ளவிருக்கிறார் ராகுல் காந்தி. அதன்  பிறகு மாமத்தில் இருந்து கல்லம்பலம் வரையிலும் பாத யாத்திரை மேற்கொள்கிறார்.


450 கி.மீ., யாத்திரை


இன்று காலை தமிழக எல்லையில் இருந்து கேரளாவிற்குள் செல்லும் ராகுல் காந்தி, மொத்தம் 19 நாட்களில்  450 கி.மீ., தூரம் பயணிக்கிறார். இந்த  பாத  யாத்திரை வரும் 14ல் கொல்லத்தில் நுழைந்து, அங்கிருந்து 17 ல் ஆழப்புலா வழியாக எர்ணா குளம் மாவட்டத்திற்குள் இம்மாதம் 21 மற்றும் 22ல் பயணித்து திரிச்சூரை 22ல் வந்தடைகிறார். செப்டம்பர் மாதம் 26 மற்றும் 27 ல் பாலக்காட்டில் தொடங்கும்  இந்த யாத்திரை 28ம் தேதி மலப்புரம் வந்தடையும் வகையில் பாரத் ஜோடோ யாத்ரா திட்டக்குழுவால் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் கேரள பயணம் முடிவடைகிறது.