பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 30 ஆம் தேதி பிளாட்டினம் சிட்டி துணை மின்நிலையப் பகுதியில்  மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது

Continues below advertisement


பெங்களூரு மின் தடை:


பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 30 ஆம் தேதி பெங்களூருவின் பிளாட்டினம் சிட்டி சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏழு மணி நேரம் வரை மின் தடை ஏற்படும்.


பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM), நவம்பர் 30 ஆம் தேதி  மின்வெட்டு ஏற்ப்படும் என அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் ஒத்துழைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடை ஏற்படும் போது இடைப்பட்ட மின்சார விநியோகத்தை அனுபவிப்பார்கள்.


எவ்வளவு நேரம் மின்வெட்டு?


இந்த மின்வெட்டு 7 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் எனவும், இருப்பினும், ஒவ்வொரு பகுதியிலும் பணிகள் முடிவடைதை பொறுத்து நேரங்கள் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெஸ்காம் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எந்த பகுதியில் மின் தடை?


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அலிஸ்டா, ஜெய் பாரத் இண்டஸ்ட்ரீஸ் ஏரியா, டாடா அக்வால், கார்லே, ராகவேந்திரா லேஅவுட், ஆர்என்எஸ் மோட்டார், முனேஷ்வர் நகர், வைஷ்ணவி நக்ஷத்ரா அடுக்குமாடி குடியிருப்புகள், எல்டி கார்லே, முனேஷ்வர் நகர் 1வது பிளாக், ஆர்டிஓ டிராக் ரோடு, பிளாட்டினம் சிட்டி அடுக்குமாடி குடியிருப்புகள், பிஎஃப்டபிள்யூ, மற்றும் என்டிஆர்ஓ உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.