பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பெங்களூரு நகரில் 7 மணி நேரத்திற்கு மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.

Continues below advertisement

எவ்வளவு நேரம் மின்வெட்டு?

பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ளும் இடங்களிள் மின் தடையானது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மின் தடை இருக்கும் என்றும் பணிகள்  திட்டமிட்ட  நேரத்திற்கு முன்பே முடிவடைந்தால் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.

எந்த பகுதியில் மின் தடை?

மாதேஸ்வராநகர், பிரசன்னா லேஅவுட், நடகெரப்பா தொழிற்பேட்டை, ஹெரோஹள்ளி, துங்காநகர், விஸ்வேஷ்வரா நகர், அஞ்சனா நகர், அன்னபூர்ணேஸ்வரி நகர், சுஞ்சடகத்தே, நீலகிரி ஹெக்கனஹள்ளி, கொடிகேஹள்ளி, ஸ்கடா நகர், சிக்காகொல்லார்ஹள்ளி, பத்மாவதி அஹள்ளி, சீக்ககொல்லார்ஹள்ளி

Continues below advertisement

மேலும், பெங்களூரு RHCS திட்டத்தின் கீழ் பெங்களூருவின் சில பகுதிகளை சுமார் ஏழு மணி நேரம் நீடிக்கும் மின்வெட்டு பாதிக்கிறது. டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை தொடரும் இந்தப் பணியில் 11KV மற்றும் இரண்டாம் நிலை மின் கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்கள் மாற்றப்படுகின்றன. பெங்களூரு இரட்டைச் சாலையின் இருபுறமும் நடைபாதை மேம்பாட்டிற்கான தடைகளை அகற்ற இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் தடைபடுகிறது.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.

 பெஸ்காம் மின்சாரம் வழங்கும் இடங்கள்

கர்நாடகாவின் எட்டு மாவட்டங்களான பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு கிராமப்புறம், சிக்கபல்லபுரா, கோலார், தாவணகெரே, தும்கூர், சித்ரதுர்கா மற்றும் ராமநகரா ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கும் பொறுப்பு பெஸ்காமுக்கு உள்ளது. இந்த நிறுவனம் 41,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவையும் கோடிக்கும் மேற்பட்ட மக்களையும் கொண்டுள்ளது. இது நான்கு மண்டலங்கள், ஒன்பது வட்டங்கள், 32 பிரிவுகள், 147 துணைப்பிரிவுகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் வழியாக செயல்படுகிறது.