Continues below advertisement

பெங்களூருவில், 9 நாட்களுக்கு தினமும் 8 மணி நேரம் என்ற அளவில் மின்தடையை அம்மாநில மின்சார விநியோக நிறுவனமாக பெஸ்காம்(BESCOM) அறிவித்துள்ளது. மக்களை வாட்டி வதைக்கும் இந்த மின்வெட்டு, அக்டோபர் 23-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 31-ம் தேதி வரை இருக்கும் என்றும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் பெஸ்காம் கேட்டுக்கொண்டுள்ளது.

பெங்களூரு மின் தடை - 9 நாட்கள், தினமும் 8 மணி நேரம்

பெங்களூரு முழுவதும் பல்வேறு துணை மின் நிலையங்கள் மற்றும் 11 kV ஃபீடர்(Feeder) லைன்களில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, அக்டோபர் மாதம் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 நாட்களுக்கு மின்வெட்டை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM), அக்டோபர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை மின்வெட்டை அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் ஒத்துழைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடை ஏற்படும் போது இடைப்பட்ட மின்சார விநியோகத்தை அனுபவிப்பார்கள்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

அக்டோபர் 23 முதல் அக்டோபர் 31 வரை 9 நாட்களுக்கு, தினமும் 8 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் எனவும், இருப்பினும், ஒவ்வொரு பகுதியிலும் பணி முன்னேற்றத்தைப் பொறுத்து நேரங்கள் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெஸ்காம் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளின்

  • பனஷங்கரி
  • ஜே.பி. நகர்
  • ஜெயநகர்
  • BTM லேஅவுட்
  • விஜயநகர்
  • நாகர்பவி
  • ராஜராஜேஸ்வரி நகர்
  • கெங்கேரி
  • சந்திரா லேஅவுட்
  • வித்யாரண்யபுரா
  • யெலகங்கா
  • HSR லேஅவுட்
  • கோரமங்களா
  • இந்திராநகர்
  • மகாதேவபுரா
  • கே.ஆர்.புரம்
  • எலக்ட்ரானிக் சிட்டி
  • வைட்ஃபீல்ட்

இந்த பகுதிகளில் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைக்க, இந்த மின்வெட்டு கட்டம் வாரியாக மேற்கொள்ளப்படும் என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து பராமரிப்பு பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்றும், பணிகள் முடிந்ததும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்றும் பெஸ்காம் உறுதியளித்துள்ளது.

அத்தியாவசிய சாதனங்களை சார்ஜ் செய்யவும், முக்கியமான தரவுகளை காப்புப் பிரதி எடுக்கவும், சாத்தியமான குறுக்கீடுகளைத் திட்டமிடவும் மின்சார நிறுவனம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பெங்களூருவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு

பெங்களூருவின் சில பகுதிகள் 2 மாதங்களாக மின்வெட்டை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, வார இறுதி நாட்களில் 8 முதல் 9 மணி நேரம் மின்வெட்டை மக்கள் எதிர்கொள்கின்றனர்.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து, கர்நாடக மின் பரிமாற்றக் கழகம் லிமிடெட்(KPTCL) மற்றும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM) ஆகியவை, வழக்கமான சேவை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளை காரணம் காட்டி, நகரங்களில் மின் தடைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

கர்நாடக எரிசக்தித் துறை அதிகாரிகள், இந்த மின் தடைகள் "சுமை குறைப்பு" அல்ல என்றும், KPTCL மற்றும் BESCOM ஆகியவற்றின் நீண்டகால பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.