பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 19 ஆம் தேதி பெங்களூருவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது
பெங்களூரு மின் தடை:
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனத்தின் (BESCOM) அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 19 ஆம் தேதி பெங்களூருவின் பல பகுதிகளில் மின் தடை ஏற்படும்.66/11 kV பல்லேடியம் மற்றும் 66/11 kV டெலிகாம் லேஅவுட் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்வெட்டு அமலில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம்(BESCOM), நவம்பர் 19 ஆம் தேதி மின்வெட்டு ஏற்ப்படும் என அறிவித்தது. இந்த நேரத்தில் மக்கள் ஒத்துழைக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின் தடை ஏற்படும் போது இடைப்பட்ட மின்சார விநியோகத்தை அனுபவிப்பார்கள்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை:
இந்த மின்வெட்டு 7 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் எனவும், இருப்பினும், ஒவ்வொரு பகுதியிலும் பணிகள் முடிவடைதை பொறுத்து நேரங்கள் மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பெஸ்காம் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்:.
ராஜாஜிநகர் 1 முதல் 6வது பிளாக், கார்டு ரோடு மேற்கு (1 முதல் 5வது கிராஸ்), மகாகணபதிநகர், டாக்டர் மோடி மருத்துவமனை சாலை, மஞ்சுநாத்நகர், சிவநகர், அக்ரஹாரா தாசரஹள்ளி, லிங்க் ரோடு, பிரகாஷ் நகர், கேஎச்பி காலனி 2வது கட்டம், தேவையா பூங்கா, குப்பண்ணா இண்டஸ்ட்ரியல் பிளாக்வே, நாகப்பண்ணா இண்டஸ்ட்ரியல் ஏரியா, ஜி.பி.டி. சுப்ரமணியநகர், எல்என் புரா, ராஜ் குமார் சாலை, தயானந்தநகர், சாய் மந்திர் பகுதி, ஹரிச்சந்திரா காட், பைப்லைன் மற்றும் அருகிலுள்ள இடங்கள், ஷானி மகாத்மா கோயில் பகுதி. ராஜாஜிநகர் சுற்றுப்புறங்கள், அரண்மனை குட்டஹள்ளி, முனேஷ்வர் பிளாக், மல்லேஸ்வரம் நீச்சல் குளம் பகுதி, மற்றும் மாருதி விரிவாக்கம்.