பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் பஜ்ஜி சுட்ட வறுத்த எண்ணெயில், தன் காரை ஒன்பது ஆண்டுகளாக ஓட்டி வருகிறார். இதுவரை 1.20 லட்சம் கி.மீ. வரை ஓட்டியும் காருக்கு எந்த பழுதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


கர்நாடகாவில், பெங்களூருவை சேர்ந்த 40 வயதான அவினாஷ் நாராயணசாமி. இவர் ஒன்பது ஆண்டுகளாக பொறித்த எண்ணெயில் காரை ஓட்டி வருகிறார்.


இதற்காக ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா சமைக்க, மீதம் உள்ள எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கி வருகிறார். அதன் பிறகு, அவர் அதை பல்வேறு நிலைகளில் சுத்திகரித்து எண்ணெயை எரிபொருளாக மாற்றுகிறார்.


இதன்படி 1 லிட்டர் எண்ணெயில் இருந்து 700 முதல் 800 மில்லி எரிபொருள் கிடைக்கிறது. இதற்கான விலை லிட்டருக்கு 60 முதல் 65 ரூபாய். கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்த ஆயிலை தனது காருக்கு பயன்படுத்தி வருகிறார்.இதுவரை 1.20 லட்சம் கி.மீ வரை ஓட்டியுள்ளார். இதனால், காரின் இன்ஜின் சேதமடையவில்லை.


இது லிட்டருக்கு 15 முதல் 17 கிமீ ‘மைலேஜ்’ கிடைக்கும். இதை அனைத்து டீசல் வாகனங்களிலும் பயன்படுத்தலாம். மற்ற டீசல் வாகனங்களை விட புகை குறைவாக உள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பயோ’ எரிபொருளாகவும் சான்றளிக்கப்பட்டுள்ளது.


இது தவிர சமையல் எண்ணெயில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் போது, வீணாகும் கழிவுகளில் இருந்து கை கழுவும், வீட்டை சுத்தம் செய் யும் கிருமி நாசினியையும் தயாரிக்கிறார். இதன் வாயிலாக இவர் "இண்டியன் புக் ஆப் ரெக் 'கார்ட்ஸ்' சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.


பெட்ரோல் விலை : 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.


இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.


இருப்பினும், சென்னையில்  56வது நாளாக இன்று ( ஜூலை 16) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.94க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


இப்படியாக 100 க்கு ரூபாய்க்கு மேல் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை ஆகும்போதும் இதுமாதிரியான மாற்று வழி தேவைதான் என்று மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண