BECIL மத்திய அரசு நிறுவனத்தில் Supervisors, MTS, Medical Record Technician, Cyber Crime Threat Intelligence Analyst, Cyber Crime Investigator/ Cyber Crime Investigation Researcher, Software Developer/ Software Programmer & Legal Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் B.E/ B.Tech/ M.Tech/ BCA/ MCA/ LLB/ LLM/ Bachelor’s Degree/ Postgraduate Degree ஆகிய கல்வித்தகுதியினை பெற்றிருப்பவர்களாகவும், 45 முதல் 60 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
BECIL மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே இப்பணியில் சேர தகுதியும், விரும்பவும் உடையவர்கள் இந்த இணைய https://becilregistration.com/
இதோடு தங்களது விண்ணப்பத்தினை மே 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பில் உள்ளது. மேலும் வேலைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்த பின்பு, எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதோடு மட்டுமின்றி 12th, Diploma, B.Sc படித்தவர்களுக்கு BECIL ல் 28 Medical Record Technician பணி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மேற்கண்ட தகவலை BECIL Notification Details, BECIL Apply Link என்ற இணையத்தில் முழுமையாக தெரிந்து கொண்டு வருகின்ற மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பணியிடங்களை நிரப்புவதற்கும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அறிவிப்பில் உள்ளது.