புதுச்சேரியில் திமுக எம்பி ஆராசாவை கண்டித்து பந்த்- விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு, இந்து மதத்தை பற்றியும், இந்து பெண்கள் பற்றியும் தவறாக பேசிய தி.மு.க., எம்.பி., ராசா மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவரை கண்டித்தும் புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில. உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசு பள்ளிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.


புதுச்சேரி-பந்த் போராட்டத்தின் போது வியாபாரிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். இந்து மதத்தை இழிவாக பேசிய தி.மு.க எம்.பி ஆ ராசாவை கண்டித்து, புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் இன்று (27ம் தேதி) பந்த் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இந்து முன்னணியினருடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும், பந்த் போராட்டத்தை விலக்கிகொள்ள மறுத்து விட்டனர். இந்நிலையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், இந்து முன்னணி நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நடத்துவது உறுதியானது.


இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயத்திடம் கூறியதாவது :- பந்த் போராட்டத்தை கைவிடும்படி இந்து முன்னணி அமைப்பினரிடம் வலியுறுத்தப்பட்டது. அவர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்பதால் போராட்டத்தை வாபஸ் பெற மறுத்து விட்டனர். எனவே அமைதியான முறையில் பொதுமக்கள், வணிகர்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி போராட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட் டுள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.


இன்று பந்த் போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த டி.ஜி.பி., மனோஜ்குமார் லால் உத்தரவிட்டுள்ளார். பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகளை மிரட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.


“பொறுப்பு; ஆட்சி; பென்ஷன் பணம் - பறிபோனால் நாங்கள் பொறுப்பல்ல” - வெளிப்படையாக மிரட்டும் அண்ணாமலை


பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர