இந்தியாவில் புகழ் பெற்ற பிரபல பைக் நிறுவனங்களில் ஒன்று பஜாஜ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மிகவும் முக்கியமான பைக் மாடல்களில் பல்சர் எப்போதும் டாப்பான ஒன்று. அடிக்கடி இந்த பல்சர் பைக்கில் சில புதிய அம்சங்களை கொண்டு வந்து இளைஞர்களை கவரும் வேலையில் பஜாஜ் எப்போதும் ஈடுபடும். பொல்லாதவன் திரைப்படத்தில் தனுஷ் பயன்படுத்திய பல்சர் பைக் அப்போதே பல இளைஞர்களின் மனதை திருடியது. 


 


இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தன்னுடைய புதிய மாடலான பல்சர் 250 டிடிஎஸ்ஐ பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு பதிவுகளை பஜாஜ் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது. மேலும் புதிய பஜாஜ் பல்சர் 250 ரக பைக் இன்னும் நிறையே இடங்களில் விற்பனைக்கு வரவில்லை. இதனால் பலரும் ஆவலுடன் இதன் வருகையை எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். அப்படி ஒருவர் விளையாட்டாக போட்ட இன்ஸ்டா கமெண்ட் தற்போது அவருக்கு பைக்கை பெற்று தர ஒரு வழியாக அமைந்துள்ளது. 


 






 


பஜாஜ் பல்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கில் இந்த பைக் தொடர்பாக ஒரு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பதிவிற்கு விஷ்ணு என்ற நபர் எனக்கு இந்த பைக் கிடைக்குமா? என்ற கமெண்ட்டை பதிவிட்டுள்ளார். அவர் ஆச்சரியப்படும் வகையில் பல்சர் பக்கத்திலிருந்து ஒரு பதில் கமெண்ட் போடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், “உங்களுடைய இந்த கமெண்டிற்கு இரண்டரை லட்சம் லைக்ஸ் வந்தால் இலவசமாக நாங்கள் புது பைக்கை தருகிறோம்” என்று பதிவிட்டுள்ளது. 




இதை நம்ப முடியமால் அந்த நபர் மீண்டும் அங்கு பதிவை செய்தார். அதற்கும் அந்த நிறுவனம் தன்னுடைய பதில் பதிவை செய்துள்ளது. அதில்,”நாங்கள் சொன்னால் சொன்னது தான்” என்று அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே தனக்கு பைக் கிடைக்க அவர் இன்ஸ்டாகிராமல் பலரது உதவியை நாடி வருகிறார். தற்போது வரை அவருடைய கமெண்ட்ஸை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். இன்னும் 246 ஆயிரம் பேர் லைக் செய்தால் மட்டுமே அவருக்கு இலவசமாக பைக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: காவலர்களே! பேசுங்க.! ஆனா சோஷியல் மீடியாவ்ல எதுவும் வேண்டாம் - இமாச்சலில் இப்படி ஒரு பிரச்னை!!