மத்தியபிரதேசத்தில் உள்ள மொரோனா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேர் பெண்கள். மேலும் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் நிலத்தகராறு வன்முறையாக மாறியதை அடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளில் பலர் துப்பாக்கிகளை ஏந்தியபடி உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் சுட ஆரம்பித்தனர். மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மொரோனா மாவட்டத்தில் இருந்து 50 முதல் 60 கிமீ தொலைவில் உள்ள லெபா கிராமத்தில் தீர் சிங் தோமர் மற்றும் கஜேந்திர சிங் தோமர் என்ற இருவரின் குடும்பங்களுக்கு இடையே காலை 10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
2013 ஆம் ஆண்டு கழிவுகளை கொட்டுவது தொடர்பாக இரு குடும்பத்தினரும் மோதிக்கொண்டனர். அப்போது தீர் சிங் தோமரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர், இதனால் கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறினர்.
நீதிமன்றத்திற்கு வெளியே இரு குடும்பத்தினரும் சமரசம் செய்துகொண்டனர், கஜேந்திர சிங் குடும்பத்தினர் இன்று கிராமத்திற்குத் திரும்பினர். தீர் சிங் தோமரின் குடும்பத்தினர் அவர்கள் மீது தடிகளால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட ஆறு பேரில் கஜேந்திர சிங் தோமர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அடங்குவர்.
கொலைக்கான காரணம் குறித்து கேட்டபோது, இரு குழுக்களுக்கும் பழைய பகை இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொலையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 8 பேரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.