Abp குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே, சர்வதேச விளம்பர சங்கத்தின் இந்தியப் பிரிவுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.


அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட சர்வதேச விளம்பர சங்கமானது, உலகளாவிய அளவில் விளம்பர வர்த்தக சங்கங்கள் மற்றும் ஊடகங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் கார்ப்பரேட் உறுப்பினர்கள், கல்விசார் உறுப்பினர்கள், 56  பிராந்திய தலைவர்கள், 76 நாடுகளைச் சேர்ந்த இளம் தொழில் வல்லுநர்கள், உலகின் தலைசிறந்த 10 பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


சர்வதேச விளம்பர சங்கமானது, இந்தியாவின் விளம்பரத் துறையில் முதன்மையாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக  IAA Leadership Awards, IAA Olive Crown Awards, IndIAA Awards, IAA Debates, IAA Conversations உள்ளிட்ட விருதுகள் மூலம் பிரபலமாக அறியப்படுகிறது.



Abp தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே தேர்வு:


26 வருடங்கள் ஊடக அனுபவம் கொண்ட அவினாஷ் பாண்டே, கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் ஏபிபி நெட்வொர்க்கின் பல்வேறு துறைகளில் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் 2019-ஆம் ஆண்டு ஏபிபி நெட்வொர்க்கின் தலைமை செயல் அதிகாரியாக (CEO) செயல்பட்டு வருகிறார்..


இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான, சர்வதேச விளம்பர சங்கத்தின் (IAA) இந்தியாவுக்கான தலைவராக ஏபிபி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவினாஷ் பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். NBDA  எனும் தேசிய செய்தி ஒளிபரப்பாளர்கள் & டிஜிட்டல் சங்கத்தின் (NBDA - News Broadcasters & Digital Association) தலைவராக ABP செய்தி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அவினாஷ் பாண்டே சமீபத்தில்  தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதர பொறுப்பாளர்கள்


ஃப்ரீ பிரஸ் ஜர்னல் குழுமத்தின் இயக்குநர் திரு. அபிஷேக் கர்னானி, துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ஊடகத்துறையில் பல காலங்களாக பணியாற்றிய வரும் நந்தினி டயஸ் கெளரவ செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்தியப் பிரிவுக்கான தலைவராக மேகா டாடா பணியாற்றினார்.


மேலும் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களாக ஆர்.கே. சுவாமி பிரைவேட் லிமிடெட் தலைவர் ஸ்ரீனிவாசன் சுவாமியும், மாத்ருபூமி குழுமத்தின் இயக்குநர் ஷ்ரேயாஸ் குமாரும், தெற்காசிய குழுமத்தின் தலைமை செயலக அதிகாரி பிரசாந்த் குமார், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் செயலக இயக்குநர் அனந்த் கோயங்கா மற்றும் தேஷ்தூத் மீடியா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜனக் சர்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யபடுவதற்கான குழுக்களில் இடம்பெற்றவர்கள்;


இந்தி மற்றும் கிட்ஸ் டிவி நெட்வொர்க் தலைவர் நினா எலாவியா ஜெய்பூரியா, வயாகாம்18, டிஜிட்டல் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் திரு. நீரஜ் ராய், ஈரோஸ் மீடியா வேர்ல்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பிரதீப் திவேதி, நியூஸ் பிசினஸ் ஆப்பர்ட்யூனிட்டீஸ் தலைவர் கிராந்தி காடா, ஈநாடு குழுமத்தின் இயக்குநர் ஐ.வெங்கட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


 குழுவின் அழைப்பாளர்களாக இருப்பவர்களின் விவரம்;


· ரமேஷ் நாராயண், நிறுவனர், கேன்கோ அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட்.
· நீனா தாஸ்குப்தா, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குநர், ஜிர்கா டிஜிட்டல் சொல்யூஷன்ஸ்     பிரைவேட் லிமிடெட்.
· ராணா பருவா, தலைமை நிர்வாக அலுவலர், ஹவாஸ் குழுமம் இந்தியா
· பார்த்தா சின்ஹா, தி டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் தலைவர் 
. டாக்டர் பாஸ்கர் தாஸ்
· மித்ராஜித் பட்டாச்சார்யா, நிறுவனர் மற்றும் தலைவர், ஹொராலஜிஸ்டுகள்
· சாம் பல்சரா, மேடிசன் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் 


· அலோக் ஜலான், நிர்வாக இயக்குநர், லக்ஷ்யா மீடியா குழுமம்
· ராகுல் ஜோஹ்ரி, தலைவர் - பிசினஸ் சவுத் ஆசியா, ஜீ எண்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்.
· ராஜீவ் பியோத்ரா, நிர்வாக இயக்குநர், எச்.டி. மீடியா லிமிடெட்.
. கெவின் வாஸ், தலைவர், நெட்வொர்க் பொழுதுபோக்கு சேனல்கள், டிஸ்னி ஸ்டார்
· குணால் லாலானி, நிர்வாக இயக்குநர், கிரேயன்ஸ் அட்வர்டைசிங் பிரைவேட் லிமிடெட்


· அசோக் வெங்கட்ரமணி, நிறுவனர், இன்டெலிஜென்ட் இன்சைட்ஸ் பிரைவேட் லிமிடெட்.
· ராணி ரெட்டி, இயக்குநர், இந்திரா தொலைக்காட்சி லிமிடெட்.
· மோனிகா நய்யார் பட்நாயக், நிர்வாக இயக்குநர், சம்பாட் குழுமம்