ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை:  பேரிடர் மேலாண்மை ஆணையம் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜம்மு காஷ்மீர் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது, பனிச்சரிவு தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவிக்கையில்,  அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.


12 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை


ஆகையால் அனந்த்நாக், பந்திப்பூர், பாரமுல்லா, கந்தர்பால், குப்வாரா, குல்காம், தோடா, கிஷ்த்வார் மற்றும் பூஞ்ச் ஆகிய இடங்களில் 2,000-2,500 மீட்டருக்கு மேல்  ("நடுத்தர ஆபத்து") பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ரியாசி, ரஜோரி மற்றும் ராம்பன் பகுதிகளில் ( "குறைந்த ஆபத்து"  ) பனிச்சரிவானது 2,000-2,500 மீட்டருக்கு மேல் ஏற்பட கூடும்


அடுத்த 24 மணி நேரத்திற்கு அனந்த்நாக், பாரமுல்லா, கந்தர்பால், தோடா, ரஜோரி மற்றும் பூஞ்ச் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஜம்மு-காஷ்மீர் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை பனிச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.






முன்னெச்சரிக்கை நடவடிக்கை


இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும், பாதுகாப்பு காரணங்களுக்காக பனிச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஜம்மு காஷ்மீர் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்  ( எஸ்.டி.எம்.ஏ ) தெரிவித்துள்ளது.