நாட்டின் 74-வது குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக புதுடெல்லியின் கர்த்வயா (Kartavya Path ) பாதையில்  குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க உள்ள அழைப்பாளர்கள் டிஜிட்டல் டிக்கெட் வைத்திருப்பின் வரும் 26- ஆம் தேதி டெல்லி மெட்ரோவின் குறிப்பிட்ட வழித்தடங்களில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். 


குடியரசு தினன கொண்டாட்டம்:


குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இது குறித்த அறிவிப்பினை வழங்கியது. அதன்படி கர்த்வயா பகுதியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு கொண்டாட்டத்தினை காண வருபவர்களுக்கு அருகில் உள்ள மெட்ரோ நிலையங்களில் இலவச சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 


உத்யோக பவன் (Udyog Bhawan) மற்றும் சென்ட்ரல் செக்ரட்ரியேட் (Central Secretariat ) ஆகிய மெட்ரோ நிலையங்கள் கர்தவயாவிற்கு அருகில் உள்ளது. இது மஞ்சள் லைன், மற்றும் வைலட் லைன் ஆகிய இரண்டு மெட்ரொ சேவைகளுக்கு கீழ் வருகிறது. 


இலவச மெட்ரோ பயணம்:


இந்நிலையில், கர்த்வயா பகுதியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் பங்கேற்பதற்கு அரசு வழங்கிய அனுமதி டிக்கெட் மற்றும் ஐ.டி. கார்டு இருப்பின் இந்த வழித்தடங்களில் உள்ள மெட்டோ இரயில்களில் அன்றைய தினம் மட்டும் (26.01.2023) பயணிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை.


 




எப்படி இலவச மெட்ரோ இரயில் சேவையை பயன்படுத்துவது? 


குடியரசு தின அணிவகுப்பினைக் காண்பதற்கு ஆன்லைனின் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்வர்களுக்கு QR கோர்ட் மற்றும் இ-டிக்கெட்கள் ஆகியவற்றை மெட்ரோ இரயில் நிலையங்களில் காண்பிக்க வேண்டும். தலைநகர் டெல்லியில் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றனர்.


இந்திய தேசத்திற்கு குடியரசு அங்கீகாரம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ந் தேதியே கிடைத்தது. இதையடுத்து நாடு முழுவதும் வரும் 26-ந் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.


எவ்வாறு பார்ப்பது?


இதையடுத்து, வரும் 26-ந் தேதி நாட்டின் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும். இதை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.


இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளிக்கலாம். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட உள்ளது. இந்திய அரசின் இணையதள பக்கமான https://indianrdc.mod.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று இலவசமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வழங்கும் தளமான பி.ஐ.பி.யிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.


கம்பீர அணிவகுப்பு:


சாமானியர்களும் கண்டு களிக்கும் விதமாக மத்திய அரசு ஆமாந்த்ரன் என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த தளத்தில் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்கலாம். குடியரசு தின விழாவில் பங்கேற்க நினைக்கும் பொதுமக்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை அதற்கான பிரத்யேக இணையதளமான www.aamantran.mod.gov.in என்ற இணையதளத்தில் சென்றும் பெறலாம்.


டிக்கெட் பெறுவது எப்படி?



  • முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் உள்ளே செல்ல வேண்டும்.

  • செல்போன் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

  • பங்கேற்க உள்ள நிகழ்வின் விவரங்களை கேப்ட்சாவுடன் நிரப்ப வேண்டும்.

  • ஒரு முறை மட்டுமே வரும் கடவுச்சொல் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

  • அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

  • பின்பு இணையதளம் மூலமாக உங்களுடைய டிக்கெட் இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ். வாயிலாக அனுப்பப்படும்.


இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.