இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா  சில நபர்களால் மும்பையில் தாக்கப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது.


இந்திய பேட்ஸ்மேன் பிருத்வி, சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் சப்னா கில் மற்றும் அவரது ஆண் நண்பர் ஷோபித் தாக்கூர் ஆகியோருடன் செல்ஃபி எடுக்க மறுத்துள்ளார். இதை அடுத்து இரு தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மும்பையின் சாண்டாக்ரூஸில் உள்ள ஹோட்டலுக்கு வெளியே அவரது கார் பேஸ்பால் மட்டையால் தாக்கப்பட்டது. இச்சம்பவம் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்துள்ளது.


ஷாவின் காரை சேதப்படுத்தி மிரட்டி, பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டியதற்காக, ஓஷிவாரா போலீசார் கில்லை கைது செய்து, மேலும் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


சப்னா கில் யார்?
சப்னா கில் ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர். மேலும் இன்ஸ்டாகிராமில் 2,20,000 க்கும் மேற்பட்ட ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார்.






காசி அமர்நாத், நிருவா சலால் லண்டன், மேரா வதன், ரவி கிஷன் மற்றும் தினேஷ் லால் யாதவ் போன்ற திரைப்படங்களில் சப்னா கில் நடித்துள்ளார்.சண்டிகரை சேர்ந்தவர் கில், மும்பையில் வசிப்பவர்.


வீடியோ பகிர்வு ஆப்பான ஜோஷ், மல்டிமீடியா உடனடி செய்தியிடல் ஆப்பான ஸ்னாப்சாட் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் கில் மிகவும் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார். 


வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வியாழன் பிற்பகல் விசாரணைக்காக சப்னா கில் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதை உறுதிசெய்த பிறகு, அவர் கைது செய்யப்பட்டார்.


இருப்பினும், கில்லின் வழக்கறிஞர், தனது க்ளையண்ட் ப்ரித்வி ஷாவின் ரசிகர் என்றும், அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியதாகவும் ஆனால் ப்ரித்வி ஷா போதையில் அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார். 


சப்னா கில்லின் வழக்கறிஞர் மேலும் கூறுகையில் பிருத்வி ஷா குடிபோதையில் இருந்ததாகக் குற்றம் சாட்டினார், மேலும் அவர் தனது அதிகாரம் மற்றும் பதவியை தவறாகப் பயன்படுத்தி தன்னிடம் இருந்த பேட்டால் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். ஆனால் போலீஸ் தரப்பிலோ சம்பவம் நடைபெற்ற சமயத்தில் கில் மற்றும் அவரது நண்பர் தாகூர் இருவரும் போதையில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். 
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது ஆன்லைனில் வைரலாகி வருகிறது. அதில் ஷா மீது தாக்குதல் நடப்பது தெரியவருகிறது.