உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் (Amethi) உள்ள ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுத்தபோது  200 ரூபாய் கள்ளநோட்டு வந்ததால் பயனாளர் அதிர்ச்சியடைந்தார். 


ஏ.டி.எம். மெஷினிலேயே கள்ளநோட்டு இருந்ததை அறிந்த மக்களிடையே பரப்பரப்பு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையின் போது, ஷாப்பிங்கிற்காக ஏ.டி.எம்.-இல் பணம் எடுக்க சென்ற பயனாளர் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமேதியில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுத்துள்ளார். திடீரென பணத்தில் வாசகங்கள் எழுதியிருந்ததைக் கண்டு அது கள்ள நோட்டு என்பதை கண்டறிந்தார். 200 ரூபாய நோட்டில் ’Children Bank of India’ மற்றும் ’Full of Fun’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், அருகில் இருந்தவர்களிடன் இந்த விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். 






ஏ.டி.எம்.-ஐ சுற்றி கூட்டம் கூடியது. இந்த பரப்பரப்பு சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தது தொடர்பாக, அங்கிருந்தவர்கள் காவல் துறை அதிகாரியிடம் முறையிட்டார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியிடம் விசாரணை செய்யப்படும் என்றும், பண்டிகை கால விடுமுறை முடிந்து வங்கிகள் திறக்கப்படும்போது இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை அதிகாரி உறுதியளித்தார். 


உங்கள் கையில் இருப்பது கள்ள நோட்டா இல்லை உண்மையான பணமா என்று தெரிந்துகொள்வதற்காக ரிசர்வ வங்கி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது, அதன் விவரம் கீழே..


உண்மையான நோட்டு எனில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை அதில் இடம்பெற்றிருக்கும். போலியான ரூபாய் நோட்டு எனில் இருக்காது. 



  • ரூ.200 பணத்தில் ’200’ என்பது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.

  • காந்தியின் உருவம், ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னம், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் ஆகியவைகளை தடவிப் பார்த்தால் உணரும் வகையில் இருக்கும். 

  • பணத்தில் உள்ள காந்தியின் உருவம் வலது பக்க மையத்தில்  இருக்கும். (கள்ள நோட்டில் காந்தியின் உருவம் சரியாக இருக்காது. கார்ட்டூன் போன்ற உருவத்திலோ அல்லது உண்மையா நோட்டில் இருக்கும் வலது பக்கத்தில் இருந்து சற்று தள்ளி இருக்கும். )

  • 200 ரூபாய் நோட்டை மடிக்கும்போது, அது பச்சை நிறத்தில் இருந்து இன்டிகோ நிறத்திற்கு மாறும்.

  • பணத்தில் 200 என்று எழுத்தால் எழுதப்பட்டிருப்பது பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும்.

  • ரூபாய் நோட்டின் வலது பக்கத்தில் அசோகத் தூண் இருக்கும். 

  • வலது பக்கத்தில் அரை வட்டமான இடத்தில் ரூ.200 என்று எழுதப்பட்டிருக்கும்.

  • ரூபாய் நோட்டின் சீரியல் நமப்ர், அச்சிடப்பட்ட ஆண்டு ஆகியவைகள் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை நீங்கள் சரிபார்த்து கொள்வதன் மூலம் உண்மையானதா இல்லை போலியான நோட்டா என்று எளிதாக கண்டறிய முடியும்.

  • புதிய ரூபாய் நோட்டில் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் குறியீடு மற்றும் பிரசார வாக்கியம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

  • ரூபாய் நோட்டின் மையப்பகுதியில் 200 என்று இருப்பதை வெளிச்சத்தில் காணலாம். இது ஒளி உட்புகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 





போலி நோட்டை அடையாளம் காண ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் விளக்கப்படத்திற்கான லிங்க்.


https://www.rbi.org.in/financialeducation/currencynote.aspx#