Assembly Election 2022 Dates: கோவா சட்டப்பேரவை தேர்தல் 2022 : தேர்தல் தேதி அறிவிப்பு

கோவா – 40,பஞ்சாப்-117, உத்தரகாண்ட்-70, மணிப்பூர்-60, உ.பி – 403 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

Continues below advertisement

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாகவே மீண்டும் கொரோனா தொற்றின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பஞ்சாப், உ.பி உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. 

Continues below advertisement

இந்தநிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5  மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுவதாக அறிவித்தது. 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு  வந்துவிடும். எனவே, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. அதேசமயம், தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தொடங்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

தற்போது, இந்திய தேர்தல் ஆணையம் கோவா மாநில சட்டபேரவை தேர்தலுக்கான தேதியை வெளியிட்டுள்ளது. கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் : 21.01.2022

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் : 28.01.2022

வேட்புமனுத் தாக்கல் பரிசீலனை: 29.01.2022

வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்:31.01.2022

வாக்குப்பதிவு தேதி: 14.02.2022

2017ல், கோவா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 4ஆம் தேதி நடத்தப்பட்டு, மார்ச் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. இருப்பினும், பாஜக, மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை அமைத்தது, பின்னர் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2019 இல் பாஜகவில் இணைந்தனர்.

டெல்லி விக்யான் பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா “கொரோனா நேரத்தில் தேர்தல் நடத்துவது பெரிதும் சவாலானது. கொரோனா பரவல் அதிகரிக்காத வகையில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடத்தப்படும். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 18.34 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு தேர்தலை நடத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன” எனத் தெரிவித்தார். 5 மாநில வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement
Sponsored Links by Taboola