அனைத்து LPG வாடிக்கையாளர்களுக்கும் சிலிண்டர் ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.79.26 முதல் ரூ.237.78 வரை மானியம் வழங்குகிறது. இந்த மானியத் தொகை நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் பலரும் தங்களுக்கு மானியத் தொகை வருவதே கிடையாது, யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.


இந்த நிலையில், மானியத் தொகை ஏன் வரவில்லை என்று கண்டுபிடிக்கவும் அதனை சரிசெய்யவும் வழிவகை உள்ளது. சரி ஏன் உங்களுக்கு மானியம் வருவதில்லை என பார்க்கலாம்..


நீங்கள் சரியான வங்கிக் கணக்கு எண்ணை வழங்காமல் இருந்தால் மானியம் வராது. அதேபோல, உங்களுடைய LPG ஐடியை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்காமல் இருந்தாலும் மானியம் கிடைக்காது. உங்களுடைய ஆதார் எண் வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்கப்படாததும் காரணமாக இருக்கலாம். அதேபோல, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களும் இந்த மானிய உதவியைப் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.


இதற்கு தீர்வுகான ஒரு வழியும் உள்ளது. உங்களுக்கு அருகில் உள்ள எல்பிஜி விநியோகஸ்தரிடம் இதுகுறித்து நீங்கள் தெரிவிக்கலாம். இது தவிர, டோல் ஃபிரீ எண்ணைத் தொடர்பு கொண்டும் உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம். உங்களுக்கு மானியப் பணம் வருகிறதா இல்லையா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.


http://mylpg.in/index.aspx என்ற வெப்சைட்டில் சென்று உங்களுடைய LPG ஐடியை உள்ளிடவும். நீங்கள் எந்த நிறுவனத்தின் LPG சிலிண்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். அது தொடர்பான விவரங்களையும் பதிவிட வேண்டும். அடுத்ததாக, உங்களுடைய 17 இலக்க LPG ஐடியை உள்ளிட்டு மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ’proceed' கொடுக்க வேண்டும்.


இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அடுத்து உங்களுடைய ஈமெயில் ஐடியை உள்ளிட வேண்டும். பாஸ்வர்டை பதிவிட்டதும், உங்கள் ஈமெயில் ஐடிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு, mylpg.in அக்கவுண்டில் உள்நுழைந்து பாப்-அப் செய்தியில் உங்களுடைய விவரங்களை உள்ளிடவும். இப்போது View Cylinder Booking History / Subsidy Transfer என்ற வசதியை கிளிக் செய்யவும். இதில் உங்களுக்குத் தேவையான விவரங்கள் இருக்கும்.


2021 நிதியாண்டில் மானியங்களுக்கான அரசாங்கத்தின் செலவு ரூ.3,559 ஆக இருந்தது. 2020 நிதியாண்டில், இந்த செலவு ரூ.24,468 கோடியாக இருந்தது. உண்மையில் இது ஜனவரி 2015 இல் தொடங்கப்பட்ட DBT திட்டத்தின் கீழ் உள்ளது, இதன் கீழ் வாடிக்கையாளர்கள் மானியம் அல்லாத LPG சிலிண்டரின் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், மானியத் தொகையானது வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படுகிறது. இந்த ரீஃபண்ட்(Refund) நேரடியாக இருப்பதால், இந்தத் திட்டத்திற்கு DBTL என்று பெயரிடப்பட்டுள்ளது.