தேநீரை இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என அசாம் மாநிலத்தின் பாஜக மாநிலங்களவை எம்.பி., பபித்ரா மார்கெரிட்டா நாடாளுமன்றத்தில் மத்திய அரசை வலியுறுத்தினார். ராஜ்யசபாவின் ஜீரோ ஹவரின் போது பேசிய மார்கெரிட்டா , ”தேநீர் பலரின் அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நாட்டின் குடிமக்கள் ஒரு கோப்பை தேநீருடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத்தில் இருந்து வடகிழக்கு வரையிலும், ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் தேநீர் கிடைக்கும். எனவே, இதை நம் நாட்டின் தேசிய பானமாக அறிவிக்க வேண்டும்,'' என்றார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும் என்றும் மார்கெரிட்டா கோரினார்.
டீயைப் பற்றி பேசியதும் குஷி ஆகிட்டீங்களா? உங்களுக்காக டீ தயாரிக்கும் ஒன்று வீடியோ...
வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 50 லட்சம் தேயிலை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். 2023ம் ஆண்டு அஸ்ஸாம் தேநீர் 200 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது என்றும் பாஜக எம்பி சபையில் கூறினார். “அஸ்ஸாம் மக்கள் இந்த விழாவை உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். எனவே, அசாமின் தேயிலை தொழிலை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
தேயிலை என்ற பெயரில் சந்தையில் பல்வேறு வகையான தேயிலை பானங்கள் கிடைக்கின்றன, இது தேயிலை தொழில்துறையை மோசமாக பாதிக்கிறது என்று மார்கெரிட்டா என்று தனது வருத்தத்தைப் பகிர்ந்தார் அவர், “இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தினார்.