தமிழ்நாடு:



  • சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நாளை பதவியேற்பு: ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.


  • 1191 ஏக்கர் மதுரை ஆதீன நிலத்தினை மீட்க அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு



  • வடகிழக்கு பருவமழை தீவிரம்; 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்


  • மும்மொழி, தேசிய கல்விக்கொள்கையைப் பின்பற்றுங்கள்: தனியார் பள்ளிகள் சங்கம் மாநில கல்விக் கொள்கை குழுவிடம் பரிந்துரை




  • அரசு நலத்திட்டங்களுக்காக மாணவர் விவரங்கள்; எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய அவகாசம் நீட்டிப்பு



  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-5 ஏ (Group-5a) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

  • பொங்கல் பரிசு வழங்குவது அரசின் கொள்கை ரீதியான முடிவு என தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.


இந்தியா:




  •  கேரளாவில் உள்ள பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்.




  • இனி டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில்



  • எல்லையில் ஊடுருவ முயற்சி செய்த சீன படைக்கு எதிராக வலுவான பதிலடி கொடுத்ததாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

  • பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ரூபாய் பதிப்பு சரிவு; மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்- எதிர்களுக்கு பொறாமை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றசாட்டு 

  • பாராளுமன்ற குளிர்கால கூட்ட தொடரில், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், குடியுரிமையை துறந்தவர்கள் பட்டியல் குறித்து தெரிவித்துள்ளார்.


உலகம்:



  • நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துகிறார் என தகவல். 

  • தென் அமெரிக்க நாடான பெருவில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. இந்த வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் அதன் விளைவாக விமான நிலையம் மூடப்பட்டதாகவும் அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.94 கோடியாக உயர்வு

  • ஆப்கானிஸ்தான்: காபூலில் உள்ள ஓட்டல் அருகே துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

  • இலங்கை சிறையிலிருந்து புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


விளையாட்டு:



  • புரோ கபடி லீக்: வெளியேற்றுதல் சுற்றில் உ.பி. அணியுடன் தமிழ் தலைவாஸ் இன்று மோதல்

  • இந்தியா வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.  

  • உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரின் இன்றைய அரையிறுதிப் போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி குரோஷியாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.