அசாமில் காலையிலேயே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கினர். அதிருஷ்டவசமாக இதில் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


அசாமில் நிலநடுக்கம்:


அசாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூரில் காலை 8 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் அறிக்கையின்படி, 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. 






மக்கள் பதற்றம்:


காலை நன்றாக விடிந்த நேரம் என்பதால், நிலநடுக்கத்தை உணர்ந்த உடனேயே வீடுகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும், உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சமடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம், இது லேசான நிலநடுக்கம் மட்டுமே என்பதால் பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.