ரஷ்யா - உக்ரைன் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே செல்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலால், உக்ரைனில் உள்ள மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ளிட்டவை உருகுலைந்து காணப்படுகின்றன. உக்ரைனை சுற்றி வளைத்திருக்கும் ரஷ்யா தற்போது தலைநகர் கீவை நெருங்கி இருக்கிறது. தலைநகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் தாக்குதல் கடுமையாக உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பிற நாடுகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். பலர் பதுங்கிடங்களில் பாதுக்காப்புக்காக தங்கியுள்ளனர்.


ரஷ்யா எத்தனை முறையோ உக்ரைனை சரணடைய சொல்லியும், உக்ரைன் பின் வாங்காமல் தொடர்ந்து உலகின் இரண்டாவது பெரிய ராணுவ படையே எதிர்கொண்டு போரிட்டு வருகிறது. மேலும், உக்ரைன் அதிபரை தப்பிக்க சொல்லியும், இதை பற்றியும் கவலைபடாமல் தான் நாட்டிற்காக களமிறங்கி போராடி வருகிறார்.


தொடர்ந்து, அதிபர் ஜெலன்ஸ்கி சரணடைந்தாக எழுந்த செய்திக்கு பிறகு வீடியோ மூலம் விளக்கம் அளித்த அவர், ”ரஷ்ய ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான செய்தி வதந்தி; அவ்வாறு நான் கூறவில்லை. உக்ரைன் நாட்டை ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. குழந்தைகளுக்காக  போராடுகிறோம்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். 


44 வயதான அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா போன்ற பெரிய நாட்டுக்கு எதிரான தனி ஆளாக உக்ரைனை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தை பற்றி உலகெங்கும் பல தகவல்கள் கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் புகைப்படங்கள் பகிரப்பட்டு ரஷ்யாவுக்கு எதிரான போரில் அதிபரும் களத்தில் நிற்பதாக செய்தி பரவி வருகிறது. அதற்காக அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. 



இந்தநிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த ‘அரோமட்டிக் டீ' என்ற நிறுவனம், உக்ரைன் அதிபர் பெயரில் ‘ஜெலன்ஸ்கி' என்ற டீத்தூளை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர் ரஞ்சித் பருவா கூறியதாவது:


உக்ரைன் அதிபரின் துணிச்சலையும், வீரத்தையும் கவுரவிக்கும் வகையில் அவரது பெயரில் டீத்தூளை அறிமுகம் செய்கிறோம். உக்ரைனில் இருந்து தப்பிக்க செய்வதாக அமெரிக்கா விடுத்த அழைப்பை கூட அவர் நிராகரித்து விட்டார். அதற்கு பதிலாக ஆயுதங்கள் தருமாறு அவர் கூறினார். இது அவரது குணநலனை காட்டுகிறது.




வெற்றி என்பது அருகில் இல்லை என்பது நன்கு தெரிந்தும் அவர் இன்னும் போராடுகிறார். எனவே அவரது வீரம் மற்றும் குணநலனை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரில் டீத்தூளை விற்பனை செய்து வருகிறேன். இந்த டீத்தூள் ஆன்லைனில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண