Aero India 2025: விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சி அறிவிப்பு : எங்கு நடைபெறவுள்ளது தெரியுமா?

Aero India 2025: ஆசியாவின் மிகப்பெரிய, இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியானது பிப்ரவர் 10 முதல் 4 நாட்கள் நடைபெறவுள்ளது.

Continues below advertisement

விமான கண்காட்சியானது, வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையே கூட்டாண்மையை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை வழங்குவதுடன், உள்நாட்டு செயல்முறையை மேம்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

Continues below advertisement

இந்தியா 2025 விமான கண்காட்சி


ஏரோ இந்தியா 2025 விமான கண்காட்சி பிப்ரவரி 10 முதல் 14 வரை பெங்களூருவில் நடைபெற உள்ளது.  ஆசியாவின் மிகப்பெரிய 15-வது விமானக் கண்காட்சியான - ஏரோ இந்தியா 2025 - கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் 2025 பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும். "ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை"  என்ற கருப்பொருளுடன், இந்த நிகழ்வு வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையே கூட்டாண்மையை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை வழங்குவதுடன், உள்நாட்டுமயமாக்கல் செயல்முறையை விரைவுபடுத்தவும் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் புதிய வழிகளைக் கண்டறிவதற்கும் உதவும்.


Also Read: Pongal 2025 Date: பொங்கல் எந்த தேதி; போகி, மாட்டு பொங்கல் எப்போது.?, விடுமுறை எத்தனை நாள்.. முழு விவரம்.!

4 நாட்கள்:

முதல் மூன்று நாட்கள் (பிப்ரவரி 10,11,12) வணிகத்துக்காகவும் 13, 14 ஆகிய தேதிகளில் பொது மக்கள் காண்பதற்காகவும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

இந்த நிகழ்ச்சியில் விமான சாகச காட்சிகள், விண்வெளித் துறையைச் சேர்ந்த ஏராளமான ராணுவ தளங்களின் நிலையான கண்காட்சிகள் ஆகியவை அடங்கும்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இணையமைச்சர், முப்படை தளபதி, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பல நிலைகளில் பல்வேறு இருதரப்பினர் சந்திப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளன. 

Also Read: ISRO Plant: சாதித்த இஸ்ரோ.! விண்வெளி செடியில் இலை துளிர்விட்டது.! நீங்களே பாருங்க

Continues below advertisement