அரவிந்தரின் 150ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கவும், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் கலந்து கொள்ள புதுச்சேரிக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேடையில் பேசுகையில், புதுச்சேரி மக்களின் தீர்ப்பின் மூலம் முதல்வர் ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயக  கூட்டணி அரசு சிறப்பாக நடைபெறுகிறது. புதுச்சேரி மாநிலம் சிறந்த மாநிலமாக வளர்ச்சி பெற அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். பிரதமர் மோதி வாக்குறுதியளித்தை போல், அனைத்து துறைகளிலும் சிறந்த புதுச்சேரியை உருவாக்கிய பின்னரே, அடுத்த முறை புதுச்சேரி வருவோம். புதுச்சேரி மாநிலத்தை புதுமை மற்றும் புதிய மாடலான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பலத்திட்டங்களை, தேசிய ஜனதா கூட்டணி அரசு தொடங்கியதில் இருந்தே செயல்படுத்தி வருகிறது.


"புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஊழல் தான் நடைபெற்றது. தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது, புதுச்சேரியில் ஏழைகளே இல்லை என்ற பொய்ப் பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி வாக்குறுதியளித்தபடி, பெஸ்ட் புதுச்சேரியை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில் நிறைவோற்றுவோம் என்று உறுதியளிக்கிறேன்," என்று அமித்ஷா பேசினார்.


புதுச்சேரிக்கு கூடுதல் நிதியும், மாநில அந்தஸ்தும்


முன்னதாக மேடையில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, "மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று புதுச்சேரியை சிறந்த மாநிலமாக கொண்டு வருவோம். புதுச்சேரி மாநில அந்தஸ்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதையும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிச்சயமாக மத்திய அரசு நமக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் அறிவித்தப்படி பெஸ்ட் புதுச்சேரியை இந்த அரசு நிறைவேற்றும். மத்திய அரசு நமக்கு கூடுதலாக நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். பிரதமரும், உள்துறை அமைச்சரும் நமக்கு கூடுதல் நிதி வழங்க ஆவண செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது," என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண