போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கப்பலில் சோதனை நடத்தியபோது ஆர்யன் கானிடம் பணம் எதுவும் இருக்கவில்லை என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆர்யன் கானின் ஜாமீன் மனு ஏற்கெனவே கீழமை நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் கடந்த அக்டோபர் 11ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அதிகாரிகள் தன்னை வேண்டுமென்றே தொடர்புபடுத்தி இருப்பதாகவும், எனவே தனது ஜாமீன் மனுவை உடனடியாக விசாரித்து தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்றும் ஆர்யன் கான் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தற்போது சரியான சென்று கொண்டிருப்பதால் கூடுதல் ஆவணங்கள் இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது. 


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஆர்யன்கான் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது கப்பலில்  ஆர்யன்கானிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கப்பலில் சோதனை நடத்தியபோது அவரிடம் பணம் எதுவும் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.13 கிராம் கொக்கையினோ, மெஃபெட்ரோன் பரவச மாத்திரைகள் ஆகியவற்றை ஆர்யன்கான் வைத்திருக்கவில்லை. அவரிடம் பணம் இருக்கவில்லை. போதை மருந்துகளை உட்கொள்ளவோ, விற்கவோ அவர் திட்டமிடவுமில்லை என்றும் தெரிவித்தார். 


மேலும் சாட்சிகளின் வாக்குமூலத்தை வாசித்துக் காட்டினார். அதில் போதைப்பொருள் பறிமுதல் தொடர்பாக ஆர்யன் கானை தொடர்புபடுத்தி எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட சில போதைப்பொருட்கள் சில நாடுகளில் தடைசெய்யப்படவில்லை, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார்கள்.. அதற்கான பாடத்தையும் கற்றுக்கொண்டார்கள். போதுமான அளவு கஷ்டங்களை அனுபவித்துவிட்டார்கள். அவர்கள் போதைப்பொருள் விற்பனையாளர்கள் அல்ல. வழக்கில் உள்ள அனைத்து தகவல்களும் மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவை.. யாரை வேண்டுமானாலும் கைது செய்துவிட்டு போதைப்பொருள் சப்ளையர் என்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வழக்குகளை புனைகிறார்கள். அதன்படிதான் ஆர்யன் கானுக்கு எதிரான வழக்கு புனையப்பட்டிருக்கிறது" என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள்,  ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக ஏற்கக்கூடாது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் மிகப்பெரிய போதைப்பொருள் நெட்வர்க்கின் அங்கமாக இருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆர்யன் கான் விற்பனையாளரிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கியதற்கு முகாந்திரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.