அருணாச்சலப் பிரதேசம் மேல் சியாங் மாவட்டத்தில் சிங்கிங் கிராமத்திற்கு அருகே, இன்று ஒரு இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.


ஹெலிகாப்டரில் யார் பயணித்துள்ளார்கள், யாருக்கேனும் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்தான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்தான விவரங்களை, ராணுவம் கூடிய விரைவில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.