TN Assembly Session LIVE: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றிய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியாக கூறுகிறேன் என்றும், 10 மாத ஆட்சியில் திமுக செய்த சாதனைகள் எந்த ஆட்சியிலும் இருந்ததில்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டத்தின் கீழ் எஞ்சிய விவசாயிகளுக்கு மார்ச் இறுதிக்குள் இலவச மின்சாரம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 87,465 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ஈ.பி.எஸ்
தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜை பேரவையில் தெரிவித்தார்.
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் ரகுபதி இபிஎஸ்க்கு பதிலளித்தார்.
ஆன்லைன் சூதாட்டம் குறித்து இதுவரை எந்த சட்டமும் கொண்டுவரப்படவில்லை - பேரவையில் ஈ.பி.எஸ் பேச்சு..
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆன்லைன் சூதாட்டம் குறித்து எந்த சட்டமும் தமிழ்நாட்டில் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.
தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு மீது நம்பிக்கை தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு. முல்லைப் பெரியாறு, காவிரி நீர் விவகாரங்களில் நல்ல முடிவுகளை தமிழக அரசு எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார் பேரவை தலைவர் அப்பாவு.
போக்குவரத்துத்துறை ரூ.48,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன். அனைத்து பேருந்திலும் பயணிக்க அனுமதிக்கமுடியாது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்லா பேருந்துகளிலும் இலவசமாக அனுமதிக்கப்பட்டால் எப்படி போக்குவரத்துறையை நடத்துவது என்று அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் செல்லுர் ராஜூவுக்கு பதில் அளித்தார்.
மகளிர் பேருந்து திட்டம் என்பது முதலமைச்சரின் கனவு திட்டம் அந்த திட்டம் வெற்றிகரமாக நடந்துக்கொண்டிருக்கிறது.
மாநகர பேருந்துகளில் வெள்ளை போர்டு பேருந்துகள் மட்டுமல்லாமல் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் ஏற அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார்.
கால்நடை மருத்துவமனைகள், கால்நடைகளுக்கான உதவி சார்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வருவாய் வட்டத்தைப் பிரித்து புதூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தகவல்
18-12-2021 முதல் 18-3-2022 வரை அரசு மருத்துவமனைகளில் 29 ஆயிரத்து 142 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேரும், ஆக மொத்தம் 33 ஆயிரத்து 247 பேர் இந்த "48 மணி நேர இலவச" சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள்.
”நானே கடந்த 18-12-2021 அன்று மேல்மருவத்தூர் சென்று “இன்னுயிர் காப்போம் நம்மைக் காப்போம் 48" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். அன்று முதல் இத்திட்டம் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு சாலைகளில் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான அனைத்துச் சூழல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்மூலம் விபத்துக்களில் சிக்குவோருடைய உயிர் காப்பாற்றப்படுகிறது” - முதலமைச்சர்
“மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியது சட்டவிரோத முடிவு. இது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசின் முடிவு எதுவாக இருந்தாலும் மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. மற்றொரு மாநில உரிமையில் தலையிடுவதன் மூலம் மக்களுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது” - கர்நாடக முதமைச்சர்
இதுபோன்ற மாநிலம் சார்ந்த பிரச்னைகளில் அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன் கூறினார். அதன்பின்னர் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாதுவில் கர்நாடக அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அது ஒருமனதாக இன்று நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Background
சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் நடக்கு முக்கிய நிகழ்வுகளின் அப்டேட்டை இங்கு காணலாம். முதல் நாள் அன்று, தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான உரிய வழிகாட்டுதல்கள் தொடர்பான வினாவிற்கு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் பின்வருமாறு:-
"இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் -48”
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதே நான் பலமுறை இந்த சாலை விபத்துக்களைப் பற்றி, அதனுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றிக் கவலையுற்று உரையாற்றியிருக்கிறேன். ஆகவே அதை மனதிலே வைத்து நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் "சாலைகளில் மக்களுக்குப் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்திட வேண்டும்" என்பதை இந்த அரசினுடைய முதன்மையான இலக்காக நாங்கள் கொண்டிருக்கிறோம். அதற்காக என்னுடைய தலைமையில் உயர் மட்டக் குழுக் கூட்டம் ஒன்றினை கடந்த 18-11-2021 அன்று கூட்டி ஆலோசித்து, "இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் -48” என்ற உயிர் காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.
"சீரான சாலைகள் திட்டம், விபத்தில் சிக்கும் அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கக்கூடிய இலவச சிகிச்சை: சாலைப் பாதுகாப்பு ஆணையம், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டம், இன்னுயிர் காப்போம்-உதவி செய்"என்ற ஐந்து அம்சத் திட்டமாக அது இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -