இந்திய விமானப்படைக்கு சொந்தமான MIG -21 ரக விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் அருகே இன்று விபத்துக்குள்ளானது.
பஹ்லோல் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக எஸ்.பி சுதிர் சவுத்ரி தெவித்தார்.
விமானி உயிர் தப்பியதாகவும், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவ ஹெலிகாப்டர் சென்றுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரத்காரில் இருந்து விமானம் புறப்பட்டுச் சென்ற போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்திய விமானப் படையின் MiG-21ரக போர் விமானம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் போர் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். Baytu காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இஸ்ரமோன் கா தலா கிராமத்தில் உள்ள பிம்டா கிராமத்திற்கு அருகே IAF விமானம் விபத்துக்குள்ளானதாக பார்மர் மாவட்ட ஆட்சியர் லோக் பாண்டு PTI இடம் தெரிவித்தார். IAF-ன் இரட்டை இருக்கைகள் கொண்ட MiG-21 பயிற்சி விமானம், அதே மாலை ராஜஸ்தானில் உள்ள உட்லாய் விமானத் தளத்தில் இருந்து ஒரு பயிற்சிக்காக சென்றது. இரவு 9 மணியளவில் விபத்து குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பார்மர் துணை எஸ்பி ஜக்கு ராம் இடம் “ஒரு தீப்பந்தம் தரையில் விழுந்து விமானிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அந்த விபத்தின் போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “ராஜஸ்தானின் பார்மர் அருகே IAF-ன் Mig-21 பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானப்படை வீரர்களை இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை என்றும் மறக்க முடியாது. இந்த சோகமான நேரத்தில் என் எண்ணங்கள் பிரிந்த குடும்பங்களுடன் உள்ளன”. என்று பதிவிட்டார்.