ஒவ்வொரு தீபாவளி வரும்போதும் ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அப்படித்தான் இந்த ஆண்டு மெட்ரோ ரயில் நிர்வாகமும் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஆனால் வெறுமென ரயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக் கூடாது என்று வார்த்தைகளால் எழுதிவைத்தால் யார்தான் கவனிப்பார்கள். அதனால் தான் மெட்ரோ நிர்வாகம் ஒரு யோசனையை அமல்படுத்தியது.
பிரபல பாடகர் தலர் மெஹந்தி 1977ல் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ம்ரித்யுதத்தா படத்தில் இடம்பெற்ற நா நா நா நா நா ரே Na Na Na Na Na Re' என்ற பாடலை தலெர் மெஹந்தி பாடுவது போல் மீமீஸ் வடிவில் பதிலாக்கியுள்ளது.
யார் இந்த தலர் மெஹந்தி?
தலர் மெஹந்தி பிரபல பாடகர். தலேர் சிங் அல்லது தலேர் மெகந்தி என்பவர் இசைக்கலைஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், இசைத்தட்டு தயாரிப்பாளர், நிகழ்ச்சியாளர் மற்றும் சூழலியலாளர். உலகெங்கும் பாங்கராவை பரப்பியதற்காக அறியப்படுகின்றார். தலேருக்கு முன்பாக பரவியிருந்த இந்தித் திரைப்பட இசைக்கு மாற்றாக திரையிசை இல்லா இசைவகையை பரப்பியதற்கும் புகழ்பெற்றவர். தனித்துவமான குரலுடன் ஆற்றல்மிகு நடனப் பாடல்களால் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கும் இந்தியப் பரப்பிசைக் கலைஞராகவும் அறியப்படுகின்றார். இவரது தலைப்பாகையும் நீண்ட தவழும் உடைகளும் தனி அடையாளங்களாக உள்ளன. தனித்துவமான குரலுடன் உணர்ச்சிமிகு பாடல்களை வழங்கி வரும் பாப் இசை பாடகர் தலர் மெஹந்தி, சமீபத்தில் வெளியான பாகுபலி படத்தில் பலே பலே பாகுபலி என்ற ஹிட் பாடலை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கும் சர்ச்சையும்:
ஆள் கடத்தல் வழக்கில் பாடகர் தலர் மெஹந்தி குற்றவாளி என பஞ்சாப் பட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆள் கடத்தல் வழக்கில் பிரபல பாடகர் தலர் மெஹந்தி குற்றவாளி என பஞ்சாப் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2003ம் ஆண்டில் ஆள் கடத்தல் வழக்கில் தலர் மெஹந்திக்கு பஞ்சாப் பட்டியாலா நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தலர் மெஹந்தி தனது குழுவினர் என கூறி சட்டவிரோதமாக மக்களை வெளிநாடுகளுக்கு பணத்திற்கு கடத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு பஞ்சாப் மாநிலம் பட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வீடியோவைக் காண: