இந்தியாவில் 100 கோடி  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து 100 பாரம்பரிய சின்னங்களை தேசியக்கொடியின் மூவர்ண வண்ணத்தில் ஒளிரச் செய்ய இந்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், பெருந்தொற்றுக்கு எதிராக துணிந்துப் போராடிய நாட்டு மக்கள் ஆகியோரின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பாரம்பரிய நினைவு சின்னங்களை மூவர்ணத்தில் ஒளிர செய்ய மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. மேலும் சுகாதார மையங்கள் மீது மழை போல மலர்தூவவும் திட்டமிடப்பட்டுள்ளது.




இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. கொரோனா பரவல் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் கோரிக்கை வைத்ததன.  இதனையடுத்து கடந்த மே மாதம் முதல் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.


இதனையடுத்து இந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது தமிழகத்தில் அவ்வபோது மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது. 9 மாதங்களில் 100 கோடி கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது. இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 100 பாரம்பரிய சின்னங்களை தேசியக்கொடியின் மூவர்ண வண்ணத்தில் ஒளிரச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி செங்கோட்டை, ஹுமாயூன் கல்லறை, குதுப்மினார், ஆக்ரா கோட்டை, உத்தரபிரதேசத்தின் ஃபதேபுர் சிக்ரி, ஒடிசாவின் கோனார்க் கோவில், தமிழ்நாட்டில் மாமல்லபுரம் கோவில், நாளந்தா பல்கலைகழகம், குஜாராத்தின் தோலாவிரா உள்ளிட்ட யுனெஸ்கோ அங்கீகரித்துள்ள 100 பாரம்பரிய சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதேபோல காதார மையங்கள் மீது மழை போல மலர்தூவவும் திட்டமிடப்பட்டுள்ளது.




கொரோனோ பெருந்தொற்றைத் தடுப்பூசி மிகப்பெரிய பேராயுதமாக செயல்பட்டது. மேலும் கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுத்ததிலும் தடுப்பூசியின் பங்கு அளப்பறியது. இந்தியாவைப் போல மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவிலும் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண