1. குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


2. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. 1ஜுன் ஒன்றாம் தேதிக்கு பிறகு 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து அரசு முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது .



 


3. அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் பாதுகாப்புடன் இருந்தால் கொரோனா நோய்த் தொற்று பரவலைக்  கட்டுப்படுத்தலாம் என்று சுகாதாரத் துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  


4. வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கங்கள் வெல்லும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்  கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார் 


5. மேற்கு வங்க மாநிலத்தில் 5ம் கட்ட தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. 4ம் கட்ட வாக்குப்பதிவின் போது கூச் பெகர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து 5ம் கட்ட பிரசாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிப்பதாக ஆணையம் அறிவித்துள்ளது. 


 6. ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி/விநியோகத்தை அதிகரிக்கவும், விலையை குறைக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்தின் விலையை இந்த வார இறுதியில் ரூ.3.500/-க்கும் கீழ் குறைக்க ரெம்டெசிவிர் தயாரிப்பாளர்கள் தானாக முன்வந்துள்ளனர்.  மருத்துவமனைகளுக்கான விநியோகத்தை பூர்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்கும்படி ரெம்டெசிவிர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய ரசாயணத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.  




 


7. வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 92-ல் அறிவிக்கப்பட்டுள்ள மறுவாக்குப்பதிவு ஆண் வாக்காளர்களுக்கு மட்டும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியது.


8. கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் திருநங்கைகள் பங்கேற்கும் சித்திரை தேர் திருவிழா கோவிட்19 காரணமாக இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 


9. இந்தியாவில் தினசரி கொரோன பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 


10. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.