வறுமைச் சூழலில் சிறுவனாக வளர்ந்து, ஒட்டுமொத்த தேசத்தின் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னேறிய டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அனைவரின் மனதிலும் இதயத்திலும் அழியாத பிம்பத்தை விட்டுச் சென்றுள்ளார். அவரது 91வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.


நம் தேசத்தை உயர்த்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் இருந்தவர் மட்டுமல்ல, கலாம் நம் நாட்டு மக்களுக்காக எப்போதும் தன்னிடம் உற்சாகமூட்டும் சொற்களைக் கொண்டிருந்தார் மற்றும் இந்தியா எதிர்கொண்ட ஒவ்வொரு தீவிர பிரச்னைகளிலும் அவரது தலையீடு இருந்தது. நமது தேசத்தின் ஒவ்வொரு குடிமக்களும் படிக்க வேண்டிய அவரது  புத்தகங்கள் இங்கே:


விங்ஸ் ஆஃப் பயர்


விங்ஸ் ஆஃப் ஃபயர் புத்தகம் முழுவதும் தனித்து நிற்கும் விஷயங்களில் ஒன்று கலாமின் நம்பிக்கை. இந்த சுயசரிதை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் இந்திய ஏவுகணைத் திட்டங்களில் புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் தலைமை விஞ்ஞானியாக மாறிய ஒரு தாழ்மையான பின்னணியைச் சேர்ந்த சிறுவனின் கதையை, அவரது நம்பமுடியாத பயணத்தை விவரிக்கிறது, பின்னர் அவர் இந்தியாவின் ஜனாதிபதியாக ஆனார். விங்ஸ் ஆஃப் ஃபயர் மூலம், டாக்டர் விக்ரம் சாராபாய் மற்றும் டாக்டர் பிரம்ம பிரகாஷ் போன்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்குப் பின்னால் பணியாற்றிய பல அறிவியல்  ஜாம்பவான்களைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள முடிகிறது.




இக்னைட்டட் மைண்ட்ஸ் : 


இக்னிட்டட் மைண்ட்ஸ் 2002-ல் எழுதப்பட்டது. இது நாடு முழுவதிலுமிருந்து மாணவர்களைச் சந்தித்த டாக்டர் கலாமின் அனுபவத்தைப் பற்றி பேசுகிறது. நாடு முழுமையிலும் உள்ள மக்களுடனான உரையாடலின் போது, ​​இந்தியா ஒரு வளர்ந்த நாடாக இருப்பதற்கான திறனை அவர் எவ்வாறு உணர்ந்தார் என்பதை இது காட்டுகிறது. ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் 'ஈகோ' மற்றும் 'ஆன்மா' என்று பெயரிடப்பட்ட விவாதத்துடன் புத்தகம் முடிவடைகிறது, இது நம் கண்களுக்குப் புலப்படுவதைத் தாண்டி நாம் ஒரு விஷயத்தை எப்படி அணுகவேண்டும் என்ற செய்தியை அளிக்கிறது.


இண்டாமிட்டபிள் ஸ்பிரிட்ஸ் :


இண்டாமிட்டபிள் ஸ்பிரிட்ஸ் நமது முன்னாள் ஜனாதிபதி கலாமின் மதிப்புகள், எண்ணங்கள் மற்றும் இலட்சியங்களை ஒன்றிணைக்கிறது. இந்நூலில் டாக்டர் கலாம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளார், "பெண்மை இறைவனின் சிறந்த படைப்பு" என்று கூறியுள்ளார். ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து ராஷ்டிரபதி பவன் வரையிலான அவரது பயணத்தின் விரிவான படத்தை இண்டாமிட்டபிள் ஸ்பிரிட்ஸ் நமக்கு தெளிவாக கூறுகிறது.


இந்தியா 2020 :


இந்தியா 2020 ஒரு சிந்தனையைத் தூண்டும் புத்தகம். 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் நான்காவது வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய வேண்டும் என்று கலாம் கருதுகிறார். இந்த புத்தகத்தில், பல்வேறு புள்ளியியல் சான்றுகள் மூலம், ‘விஷன் 2020′ நிச்சயமாக அடைய முடியும் என்பதை கலாம் நிரூபிக்கிறார். பசுமைப் புரட்சியின் வெற்றி, விண்வெளித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி போன்ற பல உதாரணங்களையும் அவர் விளக்குகிறார்.